உள்ளம் சீர்பெற்றால்……

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உடலில் ஒரு துண்டு உள்ளது அது சீர்பெற்றால், உடல் பூராகவும் சீர் பெறும். அது சீர் பெறாவிட்டால், உடல் முழுவதும் சீர் கெட்டு விடும்.
மற்றும் இன்னொரு ஹதீஸில் நபி அவர்கள் அல்லாஹ் உங்களின் வெளித்தோற்றங்களை பார்ப்பதில்லை மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கிறான்.
போன்ற நபி மொழிகள் உள்ளத்தை பற்றியும் அதனை தூய்மையாக வைத்திருப்பது பற்றியும் மிக முக்கியத்துவம் வழங்கியுள்ளமையை அறியலாம்.
heart
இவ்வாறு இதற்கு முக்கியத்துவத்தை இஸ்லாம் ஆரம்ப காலம் முதலே வழங்கியிருந்தாலும், இன்றைய நவீன அறிவியல் தமது பல கண்டுபிடிப்புகள் மூலம் உள்ளம் என்ற கண்காணாத ஒரு மென்பொருளே ஒரு மனிதனின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் ஒரு வன்தட்டாக காணப்படுகின்றது என்பதை கண்டுபிடித்துள்ளது.
இதனடிப்படையிலேயே இன்றைய சமூகத்தில் அரங்கு ஏறிவரும் குற்றச்செயல்கள் பெரும்பாலானவற்றிற்கு தீர்வாக குறித்த துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற உளவளத்துறை நிபுணர்கள் மூலம் குற்றவாளிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளத்தை சீராக்கி ஏனைய செயற்பாடுகளை சீராக்கி மீண்டும் அக்குற்றச்செயல்கள் தலைதூக்குவதை தடுக்கிறது.


மேலும்,நன்மையின் பால் சென்ற உள்ளம் நன்மையின் பாலும் தீமையின் பால் சென்ற உள்ளம் தீமையின் பாலும் இட்டுச்செல்கின்றமையை நாம் பல சம்பவங்கள் மூலம் அறிகின்றோம்.
உலகில் நடந்த முதல் கொலை முதல் இன்று நடக்கும் அனைத்து குற்றச்செயல்களுக்கும் சீர் பெறாத உள்ளம் தான் பிரதான காரணமாகும்.
இது தவிர, உடல் உறுப்புக்களால் செய்யும் பாவங்களை விட உள்ளத்தால் செய்யும் பாவத்திற்கு கொடூரமும் தண்டனையும் அதிகமாகும்.அதனால் தான் உள்ளத்தால் பாவம் செய்த ஷைத்தானுக்கு ஆயுள் தண்டனையும், உறுப்பால் பாவம் செய்த ஆதம் (அலை) அவர்களுக்கு பாவமன்னிப்பையும் அல்லஹுத்தஆலா வழங்கினான்.
அது தவிர எமது செயற்பாடுகளின் அளவு கோலாகவும் தூய்மையான உள்ளத்தை அல்லாஹ் வைத்திருக்கின்றமையை அவனது அல் குர்ஆன் வசனங்கள் குறிப்பிடுகின்றன.
ஆகவே அன்பு சகோதரிகளே, சகோதரர்களே எம் உடலின் புற அழகிற்காக பல வகையான க்ரீம்க்ள்,பவுடர்களை பயன்படுத்தும் நாம் என்றாவது உள்ளத்தை சீராக்க வழிகள் தேடியிருக்கிறோமா? சற்று சிந்திப்போம்; செயற்படுவோம். அல்லாஹ் உதவுவான், இன்ஷாஅல்லாஹ்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *