நோபல் பரிசு

நோபெbbvnல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

2014 அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாசு சத்தியார்த்தி  பாக்கித்தானின் மலாலா யூசப்சையி ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Nobel-Peace-Prize-2014-Malala-Kailash_Satyarthi

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்சின் பாட்றிக்கு மோடியானோவி வழங்கப்பட்டுள்ளது.

French Nobel prize winner Patrick Modiano
நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் மேம்பாட்டிற்காக 2014ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு எரிக் பெட்சிக், இசுடீபன் எல், வில்லியம் மோர்னர் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

NOBEL-CHEMISTRY
நீலநிற ஒளியுமிழும் கருவியைக் கண்டுபிடித்தற்காக 2014 ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ, சுச்சி நாக்காமுரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

zzc
2014ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜான் ஓ’கீஃப், எட்வர்டு மோசர், மே-பிரிட்மோசர் ஆகியோருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ggggggggg

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *