பிச்சைத்தொழில்

“அம்மா! தாயே! பிச்சபோடுங்களே, சாப்பிட்டு இரண்டு நாட்கள், சாப்பிட ஏதும் இல்லையா?”
என்ன சகோதரரே எந்நேரமும் காதில் ரீங்காரமிடும் வசனங்களா? கேட்கும் போதே எரிச்சல் வருகிறதா? அவர்களின் கண்களில் இருந்து இப்போதே ஓடி ஒழிய வேண்டும் போல இருக்கிறதா? நீங்கjukmள் இப்படி நினைக்கும் போது இன்னும் சிலர், “இவர்களுக்கு போக வேறு இடம் கிடைக்கவில்லை போல எங்கட வீட்டுக்கு தானா வரனும்? விடிஞ்சா சேவல் கூவ மறந்தாலும் இவங்க வீட்டுக்கு வீடு செல்ல மறக்கமாட்டார்கள்” என பலரிடமும் கூறி அழுத்துக் கொள்ளுகின்றனர்.

தங்கள் பண மூட்டையிலிருந்து ஒரு மூட்டையை அள்ளிக் கொடுப்பது போல அழுத்துக்கொள்ளும் சகோதரர்களே, ஒரு நிமிடம் அவர்களின் நிலமையையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் சற்று ஆராய்ந்தால் அவ் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் பல காரணங்கள் இருக்கும். அந்தக் காரணங்கள் எம் உள்ளத்தை ஊடறுத்துச் சென்று கண்ணீராய் பெருக்கெடுத்தோடும் என்பதில் ஐயமில்லை.

குடும்பத்துடன் செல்வச்செழிப்பாக வாழ்ந்தோர், மாதாந்தம் பல இலட்சக்கணக்கில் சம்பாதித்தோர் எனப் பலர், இயற்கையின் சீற்றத்தாலும், தொழிலில் ஏற்பட்ட திடீர் சறுக்கலினாலும், இறைவனின் நாட்டத்தினால் தம் உடமைகள், சொத்து செல்வம் என அனைத்தையும் இழந்து இறுதியில் ஒரு வேளைப் பசிக்கு உணவிருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு மானத்தை இழந்து ஏன் மார்க்கத்தைக் கூட இழந்து வீடு வீடாகச் சென்று சொல்ல முடியாத பல துன்பங்களுக்கு மத்தியில் ஏதோ சொற்பப் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.kij
இவர்களின் நிலை இவ்வாறிருக்க இன்றைய நவீன காலத்தில் பிறரின் துன்பத்தில் இன்பமும் இலாபமும் காண விரும்பும் சிலர் இவ்வாறு வயிற்றுப் பிழைப்புக்கு சீரழியும் மக்களைத் தம் வலையில் சிக்க வைத்து அவர்களுக்குப் பொய் அன்பு காட்டி அவர்களின் உடனடித்தேவைகளை மாத்திரம் நிறைவேற்றி அவர்களின் உழைப்புக்களை சூறையாடுகின்றனர்.

ஏழைகளின் உழைப்பை எவ்வாறு சூறையாடுவது? என நீங்கள் சிந்திக்கலாம். சில வேளை உங்கள் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரன் பெரும்பாலும் அத்தகைய சில சுயநலமிகளின் வலைகளில் சிக்கித்தவிப்பவனாக இருக்கலாம்.
அண்மையில் ஒரு சகோதரர், பெரிய லொறி ஒன்றில் அதிகாலையில் பல பிச்சைக்காரர்கள் ஏற்றி வரப்படுவதையும், குறித்த இடங்களில் அவர்களை இறக்கி விடுவதையும் பின் மாலையானதும் அதே வாகனம் இவர்களை அழைத்துச்செல்வதையும் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
யார் இவர்கள்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
யாரோ இனம் தெரியாத நபர்கள் உறங்க உறையுள் அற்ற நிலையில் வீதியோரங்களில், பஸ் தரிப்பிடங்களில், சத்திரங்களில் எனப் பல இடங்களில் தம் வாழ்க்கையைக் கழிக்கும் பிச்சைக்காரர்களை தேடிப் பிடித்து எல்லோரையும் குறித்த ஒரு இடத்தில் தங்க வைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு உணkjnhவும் வழங்குகின்றனர். சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் இப்பிச்சைக்காரர்கள் தமது உடலை வருத்தி, சில நேரம் உயிரைக் கூட பணயம் வைத்து சம்பாதிக்கும் அந்த அற்பத்தொகையில் பெரும் பகுதியை அக் கள்நெஞ்சம் படைத்தவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற அதே வேளை இப்பிச்சைக்காரர்களைத் தங்கள் அடிமைகளாக வைத்துக்கொண்டு வேலை வாங்குகின்றனர். இதையே தங்கள் தொழிலாகத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

சகோதரர்களே, இத்தகைய ரூபத்தில் வரும் பிச்சைக்காரர்களுக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்? இவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும்? கொஞ்சம் உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்; அவர்களின் அவல நிலை உங்களுக்குப் புலனாகும்.
இவ்வாறு கூறுவதால் நாம் பிச்சைக்காரருக்கோ, பிச்சை எடுப்பதற்கோ ஆதரவு வழங்குகிறோம் என தவறுதலாக என்ன வேண்டாம். பிச்சை எடுக்கும் செயற்பாடானது நபியவர்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட ஒரு செயற்பாடாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில், உலகில் பிச்சை எடுப்பவன் மறுமையில் முகத்தில் சதைகள் அற்ற நிலையில் எழுப்பப்படுவான் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இது தவிர இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகளில் ஒன்றான ஸகாத் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது இத்தகைய ஏழைகளின் அவலத்தை மற்றும் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகும். இன்னும், ஸதகா கொடுத்தல், செய்த குற்றங்களுக்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவு கொடுத்தல் போன்றவற்றை விதித்திருப்பதும் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வை       குccbறைப்பதற்காகும்.
சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட இந்தப் பிச்சைக்காரர்களின் விடயத்தில் மிகச்சிறந்த அணுகுமுறைகளை நபி அவர்கள் பின்பற்றியுள்ளமை நம் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்டுவந்த மனிதருக்கு கோடாரி வாங்க உதவி செய்து சுயதொழிலை ஊக்குவித்த சம்பவம் நினைவுக்கு வருகிறதா?
இது போக நபியவர்களின் பல ஹதீஸ்கள் இத்தகையவர்களுக்கு குறுகிய இலாபமீட்டும் முறையை காட்டிக்கொடுக்காமல் நிரந்தரத் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதையே வலியுறுத்துகிறது. அதாவது சுயமாகத் தொழில் செய்து பிழைக்க உதவுமாறு குறிப்பிடப்படுகிறது.

ஆக என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, உங்கள் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்குக் கொஞ்சம் அனுதாபம் காட்டி உங்களுக்கு முடிந்தளவு சில சில்லறைகளுடனோ, பழைய ஆடைகளுடனோ, ஒரு வேளை உணவுடனோ உங்கள் உதவிகளை முடித்துக்கொள்ளாமல், முடிந்தால் அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள்.
மேலும், ஆழம் அறியாமல் காலை விடக்கூடாது என்பது போல பிச்சைக்காரன் வேடத்தில் வரும் கள்வர்களிடம் மாட்டாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.

மேற்கூறப்பட்ட சம்பவத்துடனான நிகழ்ச்சி தற்போது இலங்கையில் பரவலாக நடைபெறுவதாகவும் இன்னும் சில தகவல்கள்  கிடைக்கப்பெற்றனbnbh . இவ்வாறான மானக்கேடான சமூகத்துரோக செயல்கள் முன்னெடுக்கப்படுவது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் அல்லவா? இதற்காக சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து உரிய முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சித்தல் வேண்டும். இவர்களுக்கு எதிராக பொது மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் எச்சரித்தல் வேண்டும். முடியுமானால் இவ்வாறு நிலைதடுமாறும் ஏழைகளுக்குப் பொருளால், பணத்தால் உதவ பல்வேறு சமூக இயக்கங்கள் முன் வரவேண்டும் என RIDE உங்களிடம் கேட்டுக்கொள்கிறது. அல்லாஹ் உங்கள் நல்லெண்ணங்களைப் பொருந்திக் கொள்வானாக!.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *