நன்மையை ஏவுவதில் பெண்ணின் பங்கு

அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியத்தை அறிந்திருக்கும் நாம் அதன் முக்கிய அம்சமான நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் பற்றி  அறிந்திருப்பது அவசியமாகும். மிக முக்கிய பணியான இந்த நன்மையை ஏவி iolதீமையை தடுப்பது யார் கடமை?

மத்ரஸாக்களில் ஓதிய ஆலிம்களினது மாத்திரம் கடமையா?  இல்லாவிட்டால் பட்டம் பெற்ற பட்டதாரிகளினது மாத்திரம் கடமையா?  அதுவும் இல்லை என்றால் பணம் சம்பாதிக்கும் ஆண்களினது மாத்திரம்  கடமையா?  சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே உங்கள் வீட்டில் அடுப்பூதும் பெண்களினதும் தட்டிக்கழிக்க முடியாத ஒரு கடமை என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
” நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் தாம் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவராக இருக்கின்றனர்”
அவர்கள் (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படி தூண்டியும் பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைபிடித்து ஸகாத் கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.”
(சூரா-அத்தௌபா 9:71)
இஸ்லாம் பெண்ணுக்கு மிக உயர்ந்த சமூக கண்ணியத்தை வழங்கியுள்ளது.
சமூகத்தின் மிக முக்கிய கடமையான நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் என்ற பணியைப் பெண்ணுக்கும் வழங்கியதன் மூலம் ஏவுகின்ற, தடுக்கின்ற அதிகாரத்தை இஸ்லாம் அவளுக்கு கொடுத்துள்ளது. வரலாற்றிலே பெண்ணுக்கு இவ் அதிகாரம் இருந்ததில்லை.

வீட்டுக்குள் முடங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் வீதியில் வந்து பயான் சொல்வதா? இல்லை வீடு வீடாகச் சென்று notice  கொடுப்பதா? இல்லை என்றால் கடை கடையாய் சென்று poster அடிப்பதா? என்று மட்டும் சிந்தித்து அல்லாஹ்வால் உங்களுக்காகவே விதிக்கப்பட்ட சில அடிப்படைக் கடமைகளுக்கு நீங்களே தடையாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

பெண் என்பவள் தனது பெண்மைக்கேற்ப தனக்கு இயலுமான வட்டாரங்களால் இக் கடமையினை நிறைவேற்ற முயல வேண்டும். நிதானத்துடனும், அறிவுடனும், அழகிய முறையிலும் தீமையைத் தடுக்க வேண்டும். அவளது பணிக்கு சிறந்த இடம் அவளின் வீடு என்றால் மிகையாகாது. ஒருமகள் என்ற வகையில் தன் பெற்றோருக்கும் சகோதரி என்ற வகையில் தன் சகோதரர்களுக்கும் ஒரு மனைவி என்ற வகையில் தன் கணவனுக்கும் ஒரு தாய் என்ற வகையில் தன் பிள்ளைகளுக்கும் நன்மை ஏவி தீமை  தடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு பெண் தனது கடமையை தன் வீட்டிலிருந்தே ஆரம்பித்தால் சிறந்த குடும்பம், சிறந்த சமூகம், என ஒரு சிறந்த நாட்டையே கட்டியெழுப்பலாம் என்பது வெறும் கனவல்ல.Mother_and_Child

என்ன சகோதரிகளே, எங்களது பேச்சையும் இந்த சமூகம் கேட்குமா? என தப்புக்கணக்கு போட வேண்டாம். சிறந்த அணுகுமுறையோடு தெரிவிக்கும் எந்தவொரு கருத்தும் சமூகத்தில் எடுபடாமல் இருப்பது இல்லை. இதற்கான சிறந்த அணுகுமுறை ஒன்றை இஸ்லாம் காட்டித்தந்துள்ளமை அது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்பதை பறைசாற்றுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “உங்களில் ஒருவர் வெறுக்கத்தகுந்ததைக்கண்டால்,அதைத் தமது நாவால் தடுக்கட்டும், இல்லவிட்டால் அதைத் தமது கையால் மாற்றட்டும். அதற்கு ஆற்றல் பெறவில்லையெனின், தமது மனதால் வெறுக்கட்டும். இது இறைநம்பிக்கையின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
செயல், சொல், உள்ளம் என்பவற்றால் நிகழ்த்தப்பட வேண்டிய இவ்வடிப்படைக் கடமையை இன்று எம்மத்தியில் யார் செய்கிறார்கள்? தாம் மட்டும் சுவனம் செல்லாது பிறரையும் சுவனத்துக்கு அனுப்ப விரும்பும் பிறர் நலம் யாரிடமுள்ளது? இதைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடுகையில், “மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது” என்று கூறிய போது நாங்கள் கேட்டோம் “யாருக்கு”? “அல்லாஹ்வுக்கும் அவன் அருளிய குர் ஆனுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம்
stock-photo-close-up-portrait-of-beautiful-young-asian-muslim-woman-at-coffee-shop-with-lovely-smiles-78557917இவ்வாறு பிறர்நலம் பேணி பிறருக்கு நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பெண்களே உங்கள் வீட்டில், உங்கள் சமூகத்தில் இஸ்லாத்தின் வாடையைக்கூட மணக்க மறந்த பெண்களினால் கட்டவிழ்க்கப்படும் பல மூடப்பழக்கவழக்கங்களுக்கும் வீரத்துடன் முட்டுக்கட்டை இடுவது உங்கள் கடமையாகும்.
நபியவர்கள் கூறினார்கள்; “அநியாயக்காரர்களிடம் “ நீ அநியாயக்காரன்” என்று சொல்ல அஞ்சுபவர்களாக என்னுடைய சமூதாயத்தினரைக் கண்டால் நீ அவர்களிடமிருந்து விலகிக் கொள்.” முஸ்னத் அஹமட்
கொஞ்சம் பொறுமை சகோதரியே, வீரம் வேண்டும் என்று நினைத்தவாறு உங்கள் வார்த்தைகளை எறிய வேண்டாம். அல்லாஹ் கூறுகிறான்;
நன்மையும் தீமையும் சமமாகி விடாது. ஆதலால் தீமையை நீர் நன்மையைக்கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சிநேகிதனைப் போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்அன் 41:34,35)
மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப் படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.
நபி(ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
பிறமனிதர்களுடன் பழகும்போது மென்மையை கைக்கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் போதித்தார்கள். அடியார்களிடம் மென்மையை வெளிப்படுத்தும் கிருபையாளனான அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அழைக்கும் முஸ்லிம், மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடனும் மென்மையாகவும் நடந்துghgகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வளவுதான் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் மென்மையை விட்டுவிடக்கூடாது.
என் இஸ்லாமிய சகோதரியே, இஸ்லாம் உங்களுக்கு அளித்துள்ள பொறுப்புக்கள், மற்றும் அவற்றை நிறைவேற்ற காட்டியுள்ள வழிமுறைகள் என்பவற்றை பார்த்தீர்களா? இனியும் அடுப்பூதும் பெண்ணாக மாத்திரம் இருக்காமல் அநியாயத்தை எதிர்க்கும் பெண்ணாகவும் மாற இறைவன் அருள் புரிவானாக, ஆமீன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *