அளவுக்கு மிஞ்சினால் ஊட்டச்சத்து மாத்திரைகளும் உயிருக்காபத்தாகலாம்

‘எப்பவும் களைப்பாக இருக்கிறது. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும் என்று தோன்றுகிறதுuiy. ஏதாவது vitamin மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்’ இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டதல்லவா,
ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.
யாரெல்லாம் vitamin மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், vitamin மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா ? என்று நோக்கினால்,
. பொதுவாக vitamins களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.
நீரில் கரையும் தன்மையுள்ள B மற்றும் C வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு vitamins களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.ytu
A, D,E,K போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது.
vitamin A
பசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை என சின்னச்சின்னப் பிரச்சினைகளில் தொடங்கி அதிகப்படியான vitamin கள், உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிப்பது வரை சென்றுவிடும். மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின்போதுகூட வலியை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளின் உடலுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.iyjpg
vitamin D
எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான calcium சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள vitamin D மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும்போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள்கூட மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில் எட்டு வாரங்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளைத்தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், ‘Hyper Para Thrombosis’ என்ற hormone பாதிப்பு ஏற்படும் என்பது நினைவில் இருக்கட்டும்.
vitamin E
இப்போது கடைகளில் கிடைக்கும் cosmetic பொருட்கள் பலவற்றிலும் vitamin E நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்சினை வந்தால் தாங்களாகவே vitamin E மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது நல்லதல்ல. vitamin E அளவு அதிகமாகும்போது, இரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், vitamin E மாத்திரைகள், ஆண்தன்மைக்கான இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது, அரிதாக Prostate Cancer உண்டாக்கிவிடலாம்.yubg
vitamin K
இரத்தம் உறைதலுக்கு இந்த vitamin தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது ‘Hyper Thrombonimia என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக இரத்தம் உறைந்து இரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த இரத்தக் கட்டிகள், நம் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற் படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். மேலும் இதய நோய்களுக்காக (ANTI COAGULANTS) மாத்திரையான Aspirin எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் vitamin K மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.

ஆகவே, இனிய பொதுமக்களே சிறிய ஒரு வருத்தத்துக்கும் உங்களுக்குப் பெயர் தெரிந்த கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கிக் குடித்து உங்கள் உயிருக்கு நீங்களே உளையாக வேண்டாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *