பயனுள்ள வழியில் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவோம்

நேரம் பொன்னானது ; இல்ல, அதைவிட பெறுமதியானது என்றும் நேரம் வாள் போன்றது அது உங்களை வெட்ட முன் நீங்கள் அதைக் கொண்டு வெட்டி விடுங்கள் என தமிழிலும், Time is the great innovator, Time is the rider that breaks youth, Time is an unpaid advocate என ஆங்கிலத்திலும் பல சிந்தனைத்துளிகள் நேரத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகின்றன. அல்லாஹ் அல்குர்ஆனில் சூறா நஸ்ரில் காலத்தின் மீது சத்தியமிட்டுக் குறிப்பிடுவதன் மூலமும் நேரத்தின் மகிமையை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இது தவிர இன்று எந்தத் fgfhbதொடர்பு ஊடகத்தை திறந்தாலும் நேரத்தின் முக்கியத்துவத்தைக் கூற மறப்பதில்லை. ஆனாலும் இன்று எம்மில் பலர் நேரத்தின் முக்கியத்துவத்தினை அறிந்திருந்தாலும் அந்த நேரத்தினை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி அதன் உச்ச பலனை அடையும் வழிகள் அறியாது பொன்னான நேரத்தை மண்ணாக்குகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் மிகச்சிறந்த,  பயன் விளைவிக்கும் நேரம் அவனது ஓய்வு நேரமாகும். இதைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது, ஒரு பெரிய ஹதீஸில் நீ உன் ஓய்வு நேரத்தினை வேலைப்பழு ஏற்பட முன் பயன்படுத்து எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ,    இதைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஒரு நேர நிர்வாகவியல் நிபுணரிடம் ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளமை ஓய்வு நேரத்தினைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
சரி சகோதரர்களே ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் எனப் பார்ப்போமா?.

ஓய்வு நேரம்; பயனுள்ள வழி என்றவுடனே உங்கள் மனதில் துளிர்விடுவது புத்தகங்கள் வாசித்தல், வீட்டுத்தோட்டம் செய்தல், முத்திரைகள் சேகரித்தல் போன்ற பொழுதுபோக்குகள் என்பதில் கடுகளவும் மாற்றமில்லையே? எவ்வளவு காலம் பழைமையில் மூழ்கிக்கிடப்பது? மாற்றம் என்பது அனைத்துக்கும் பொதுவானதல்லவோ!. அதற்கமைய எமது பொழுதுபோக்குகளிலும் சிறிது மாற்றம் வருவது அதிசயமான விடயமல்ல.yugjg
மாற்றம் எனும் போது முற்றாக பழையவற்றை மறந்து விடுவதோ அல்லது முற்றாகப் புறக்கணித்து விடுவதோ அர்த்தமில்லை. பழையவற்றை சிறிதளவு மெருகூட்டியே புதுமை பிறக்கிறது என்ற அடிப்படையில் வழமையாக புத்தகங்களையும், வாராந்த நாளாந்த பத்திரிகைகளையும் வாசிப்பதை வழமையாகக் கொண்டிருக்கும் என் இனிய வாசிப்புப் பிரியர்களே, உங்கள் பொழுதுபோக்கு நிச்சயம் உங்rtfdகள் அறிவை வானளவிற்கு உயர்த்தும். அதே நேரம் உங்கள் பழைய பொழுதுபோக்கை கொஞ்சம் மெருகூட்டிப் பார்ப்போமா?

அதாவது காலம் காலமாய் வாசித்துக் கிரகித்துப் பழகிய உங்கள் மூளைக்கு கொஞ்சம் சிந்திக்கவும், புத்தகத்தைத் தூக்கி அழுத்துப் போன கைகளுக்கு பேனா பிடித்து எழுதவும் கற்றுக் கொடுங்கள். உங்கள் அறிவை மாத்திரம் வளர்த்த ஓய்வு நேரப் பொழுதுபோக்கு உங்கள் எழுத்தாற்றலை, சிந்தனைத் திறனை, ஆளுமையை வளர்க்கும் ஒரு சிறந்த களமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அதே நேரம் உங்கள் ஆக்கங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டீர்கள் என்றால் மிக விரைவில் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எழுத்தாளனாக வளம் வருவது இயாலாத காரியம் ஆகிவிடாது.
அது மாத்திரமா ?

வீட்டுத்தோட்டம் அமைத்தலை பொழுதுபோக்காய் கொண்டிருக்கும் சுற்றாடலின் சிநேகிதர்களே, வழமையாக பூங்கன்றுகளையும், மரக்கறிகளையும் நட்டு வீட்டுத்தோட்டத்தை அழகு படுத்திய நீங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான மரங்கள், காலப்போக்கில் அழிவை எதிர்நோக்கியுள்ள மரங்கள், மிக அரிதாகக் vcgகாணப்படும் மரங்கள், பெறுமதியான மூலிகைகள் என இனங்காணப்பட்ட மரங்கள் போன்ற வித்தியாசமான சிறப்பம்சங்களைக் கொண்ட மரங்களை நடுவீர்கள் என்றால், ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், காலப்போக்கில் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நீங்களும் உங்கள் வீட்டுத்தோட்டமும் பிரபல்யம் அடையும். உங்களது மரங்களின் பெறுமதி அறிந்தவர்கள் எவ்விலை கொடுத்தும் உங்கள் மரங்களைக் கொள்வனவு செய்வர்.
ஆகவே சகோதரர்களே, பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் கிடைக்கும் அந்த சிறிய ஓய்வு நேரத்தையும் பயனுள்ள விதத்தில், புதிய அனுகுமுறையில், மனதிற்கு இன்பமளிக்கும் விதத்தில் ஆரம்ப காலங்களில் செய்தவற்றிற்கு கொஞ்சம் மாற்றமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு,  இஸ்லாம் கூறுவது போல நேரத்தின் உச்ச பயனைப் பெறுவோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *