பாடசாலைக் கல்வியும் மாணவர்களின் ஆற்றல் விருத்தியும்.

பாடசாலை என்பது மாணவர்களுக்காகவே என்று உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிருவனமாகும். இங்கு மாணவர்களின் நலனே முக்கியமாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய இலங்கையை எடுத்துக் கொண்டால் அதிலும் முஸ்லிம் பாடசாலைகளை நோக்கினால் நிலமை தலைகீழாகவே உள்ளது எனக்கூறலாம்.

இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது பலர், இலங்கை விகிதாசார அடிப்படையில் துறைசார் கல்வி அபிவிருத்தியில்98% வளர்ச்சி அடைந்த நாடு எனவும், இங்குள்ள பாடசாலைகள் மிகச்சிறந்த பாடசாலைகள் எனவும் மார்தட்டுகின்றனர்.

trte             சற்று ஆராய்ந்து பார்த்தால், நாளுக்கு நாள் பல்வேறு கண்டுபிடிப்புகள் அறிமுகமாகும் இந்த நவீன காலத்தில் அதன் கண்டுபிடிப்பாளர் வரிசைகளில் இலங்கையர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அந்த 98% கல்வி அறிவின் மூலம் எத்தனை கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தியுள்ளனர்? இல்லை அல்லது மிகச் சொற்பம் என்று தானே கூற வேண்டும்.


இலங்கையர்களால் கண்டுபிடிghhhhப்புகள் நிகழ்த்த முடியாதா? நிச்சயமாக முடியும். அப்போது அவர்கள் ஏன் பல்வேறு கண்டுபிடிப்புகளை முன்னெடுக்காமல் இருக்கின்றனர்? என சற்று தேடிப்பார்ப்போம்.       ஆமாம், அவர்களின் சூழல் அவர்களின் புத்தாக்க சிந்தனைகளையும் சுய ஆற்றல்களை விருத்தி செய்வதிலும் கரிசனை காட்டாததே இதற்கான முக்கிய காரணமாகும். இச் சூழல் அவர்களைப் புத்தகப் பூச்சிகளாக மாற்ற முயற்சிக்கின்றது. மாற்றியும் இருக்கின்றது. ஆகவே இந் நிலமை தொடர்ந்தும் நடைபெற இடமளிக்க விடக்கூடாது.
இது தொடர்பாக சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினர்களும் சம்பந்தப்படுகின்றனர். அந்த வகையில் ஒருவனின் கல்வி வளர்ச்சியில் முக்கியமாகத் தாக்கம் செலுத்துவது பாடசாலைச் சமூகமே.
தற்காலப் பாடசாலைகளில் திருத்தியமைக்கப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

இந்நிலையில் தமது அனைத்துக் கருத்துக்களிலும் சரி காணும் பல ஆசிரியர்கள், “இல்லை நாங்கள் மாணவர்களின் நலனுக்காகவே இதைச் செய்தோம், நாங்கள் எவ்வளவோ செய்தாலும் அவர்கள் எங்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை, அவர்கள் எங்களைக் கணக்கெடுப்பதில்லை, ஒழுங்காகக் கற்று பரீட்சையில் சித்தியடைவதும் இல்லை …..” போன்ற குறைகளை முன்வைத்து முழு மாணவச் சமூகத்தையே குற்றவாளிகளாக்கும் சம்பவங்கள் பொதுவாகப் பெரும்பாலான பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் ஒரு பாடசாலையில் நடந்த சிறிய சம்பவம் எமக்குக் கிடைத்தது. உயர் தரத்துக்குக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், தன் பாடத்தில் “கூடிய மதிப்பெண்களைப் பெறவில்லை, ஒழுங்காகப் படிப்பதில்லை” என்று, நன்றாகப் படிக்கக்கூடிய திறமை மிக்க ஒரு மாணவியைச் சாடி அவரைத் தண்டித்து விட்டு, குறித்த பாடவேளையில் வகுப்பில் இருந்தவாறே அம்மாணவியின் பெற்றோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். மாணவர்கள் எல்லோர் முன்னிலையிலும் இவ்வாறு செய்தால் அம்மாணவிக்குப் புத்தி வரும் என்றுdfgfd அவர் நினைத்திருப்பார் போலும்.
ஆசிரியர் சொல்வது உண்மையென நம்பி பெற்றோரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். வகுப்பறையில் அனைவரது முன்னிலையிலும் தலைகுனிய வேண்டி ஏற்பட்ட நிலையை எண்ணி அன்றைய நாள் முழுவதும் அழுதவாறே அம்மாணவி கழித்திருக்கின்றார்.

அன்று முழு நாளும் கற்பிக்கப்பட்ட ஏனைய பாடங்கள் இவருக்கு விளங்கி இருக்குமா?

இதன் பிறகு அந்த ஆசிரியர் மீது மரியாதை தான் வருமா?

இவ்வாசிரியரின் செயல் வரவேற்கக்கூடியதா?

பிள்ளையின் முன்னேற்றத்திற்காக ஆசிரியர் கையாண்ட புது அணுகுமுறை என இதை சிலர் ஆதரிக்கவும் கூடும். பிள்ளைகளின் மனதைப் புண்படுத்தித்தான் பாடம் கற்பிக்க வேண்டும் என்றால் “குழந்தை உளவியல்”, “கல்வி வளர்ச்சியில் உளவியலின் வகிபாகம்” போன்ற கற்கை நெறிகள் ஏன் Teacher training இன் போது முக்கியமாக கற்பிக்கப்படுகிறது?

இவ்வாறு சிறுசிறு விடயங்களால் காயப்படும் பிஞ்சு உள்ளங்கள் தான் காலப்போக்கில் பல வழிகளிலும் தடம் மாறிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.utf
பொதுவாக எல்லா ஆசிரியர்களும் தமது மாணவர்களிடமிருந்து சிறந்த பெறுபேறுகளையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் மாணவர்களுக்குப் புரிந்து கொள்ளும் படியான கற்பிக்கும் ஆற்றல், மாணவர்களின் ஆற்றல் விருத்தி பற்றிய கவனம் போன்ற சில விடயங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
ஒரு மாணவன் குறித்த பாடத்தில் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கிறான், தரப்படும் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதில்லை என்போம். இதற்கு அம்மாணவன் மீது பழி சுமத்த முன் அவனின் செயல்களுக்கான அடிப்படைக் காரணங்களைத் தேட முற்பட வேண்டும். குறித்த பாடம் மாணவர்களுக்கு விளங்கும் படியாக ஊட்டப்பட வேண்டும், இடையிடையே கேள்விகள் கேட்டும் பயிற்சிகள் கொடுத்தும் மாணவர்களைத் தன் பக்கம் கவனம் செலுத்த வைக்க வேண்டும், அப்பாடம் தொடர்பாக ஏனைய கற்றல் சாதனங்களைப் பயன்படுத்தியும், மெதுவாகக் கற்கும் மாணவர்கள் முதல் அனைத்து மாணவர்களுக்கும் எளிதில் விளங்கக்கூடிய விதத்தில் கற்பிக்கும் உத்திகளையும் கையாண்டால் பெரும்பாலான மாணவர்களுக்கு கல்வி ஒரு பாகற்காயாகவோ கற்பிக்கும் ஆசிரியர் ஒரு எதிரியாகவோ மாறமாட்டார். கல்வியும் இனிக்கும்; கற்றுத்தருபவர் அதை விட இனிமைக்குரியவராகவும் மாறுவார்.
இதை விடுத்து மாணவர்களைத் தண்டிக்க முற்படும் போது அவர்களின் உடலை விட உள்ளம் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகிறது. ஒரிரு முறையன்றி தொடர்ந்தும் இது நடைபெற அவர்களின் உள்ளம் கல்லாக மாறுகின்றது. தன் எதிரியை விடப் பயங்கரமான ஒருவனைப் பார்ப்பது போல ஆசிரியர் உற்று நோக்கப்படுகிறார். சில இடங்களில் ஆசிரியர்களின் வாகனங்கள், பொருட்கள் மாணவர்களால் சேதமாக்கப்படுகின்ற அதே வேளை சில சமயம் அடி, உதைக்கும் ஆளாகின்றனர்.
மற்றுமொரு சம்பவம்….
ஒரு நாள் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் வண்டியின் இரு டயர்களும் பன்ச்சர் பண்ணப்பட்டு இருந்தன. பெற்றோல் தாங்கியில் ஒரு துளி பெற்றோல் கூட இல்லை. வாகனத்தின் இரண்டு பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளும் கழற்றப்பட்டு இருந்தன. யார் செய்திருக்கலாம்?? எனத் தேடிக்கண்டு பிடிக்கையில்,htuf
அந்த ஆசிரியர் தன் வகுப்பில் குறித்த பாடவேளையில் ஒரு மாணவனுக்கு ”கொப்பி வாங்கியிருக்கவில்லை” என்று அடித்திருக்கிறார். அடுத்த இரு பாடங்களுக்குள் கொப்பியுடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். அவன் ஒரு ஏழை என்று தெரிந்து இருந்தும் கூட தாறுமாறாக பிரம்பால் விளையாடியிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ஆசிரியரின் மோட்டார் வண்டியின் அருகே அப்பையன் வந்திருக்கிறான். உடனே அவனுக்கு ஞானம் பிறந்திருக்கிறது. அவரின் வண்டியிலிருந்து தான் எடுத்த பெற்றோலையும் கண்ணாடிகளையும் விற்று விட்டுக் கிடைத்த பணத்தில் கொப்பி வாங்கியிருக்கிறான் அந்த ஏழைப்பையன். அவன் செய்த செயல் பற்றி என்ன கூற முடியும்?

இதே நிலைமை உங்களுக்கு வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்…?
முறையாக அந்த ஆசிரியர் கொப்பி வாங்கப் பணம் கொடுத்து இருக்க வேண்டும் அல்லது கால அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும் அல்லது அவனை மன்னித்து விட்டிருக்க வேண்டும் அல்லது கொப்பியொன்று வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? இவற்றில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் அவரின் வண்டியுடன் அவர் மீதுள்ள மாணவர்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இங்கே, குறித்த ஏழை மாணவன் கள்வனாக மாறுகின்ற அதேவேளை அந்த ஆசிரியரையோ அல்லது ஏனைய ஆசிரியர்களையோ இனி பயமில்லாமல் பழிவாங்கலாம் என்ற தைரியம் ஏனைய சக மாணவர்களுக்கும் ஏற்படுகின்ற நிலமை உருவாகின்றது.
இவ்வாறு இலங்கை மாணவர்களின் ஆற்றல்கள் பெரும்பாலான பாடசாலைகளில் சிறுசிறு விடயங்களால் சூறையாடப்படுகின்றமையை எkijlடுத்துக்காட்டும் நிறைய சம்பவங்கள் நாளுக்கு நாள் உமதும், எமதும் செவிகளை எட்டுகின்றன. மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் ஒரு களமாக மாறி ஒவ்வொரு துறையிலும் தமது மாணவர்களை ஜொலிக்கச் செய்ய குறிப்பிட்ட சில தனியார் பாடசாலைகளைத் தவிர ஏனைய பெரும்பான்மைப் பாடசாலைகள் தவறியுள்ளமை மிகுந்த கவலைக்குரிய விடயமாக இருக்கும் அதேவேளை இது இலங்கையின் அபிவிருத்தியிலும் தாக்கம் செலுத்தும் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.
நாட்டின் அபிவிருத்திக்கும் இதற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். தொடர்புகள் பல உள்ளன. முன்பு கூறியது போல பரீட்சையில் சித்தியடைந்தால் மட்டும் போதும் எனப்படும் ‘exam based education’ இங்கு கற்பிக்கப்படுவதால் கல்வி கற்கும் திறனுள்ள மாணவர்கள் மட்டும் சமூகத்தில் முன்னுரிமை பெறுவார்களே தவிர பாடுவதில், மேடைப்பேச்சு பேசுவதில், எழுத்தாக்கங்கள் எழுதுவதில், வரைவதில், விளையாடுவதில் மற்றும் பல்வேறு பிற துறைகளில் திறமையுள்ள மாணவர்கள் பாடசாலைக் காலத்தில் இலைமறை காய்களாகக் காணப்பட்டு இறுதியில் அழுகி விடும் பழம் போல தமக்கும் நாட்டுக்கும் பயனற்றுச் செல்கின்றனர்.
சகோதரர்களே, உங்கள் முன்னிலையில் சாதனை வீரர்களாகத் திகழும் அஜந்த மெண்டிஸ், முத்தையா முரளிதரன், ஏ.ஆர் ரஹ்மான், ஜே.கே ரோலின், பில்கேட்ஸ், தோமஸ் அல்வா எடிசன் போன்றோரினது பெற்றோர்களோ ஆசிரியர்களோ இவர்களுக்கு பாடசாலைக் கல்வியை கட்டாயப்படுத்தியிருந்தால் உலகம் இத்தகைய பெரும் ஆளுமைகளைக் கண்டிருக்குமா?
பிரபல தொழில் அதிபரான பில்கேட்ஸ் கூறும் போது, “எனது உயர் கல்வியை நான் இறுதி வரை தொடரவில்லை எனது நண்பர் இறுதி வரை நிறைவு செய்தார்; அவர் இப்போது ஒரு இன்ஜினியர். ஆனால் நானோ அவர் தொழில் புரியும் இடத்தின் உயர் தொழிலதிபராக உள்ளேன், அவர் எனக்குக் கீழே வேலை செய்கிறார்” எனக் குறிப்பிட்டமை இன்றைய சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். vvcbc  இதன் மூலம் அவர் புத்தகக் கல்வியை விட தன் ஆற்றல் விருத்திக்கு முன்னுரிமை வழங்கியமை எடுத்துக் காட்டப்படுகிறது.
சகோதரர்களே! தற்காலப் பாடசாலைகள் கல்வியை மட்டும் போதிக்கும் இடமாக இல்லாமல் மாணவர்களின் புத்தாக்கங்களை வரவேற்கும் களமாகவும், நல்லொழுக்கங்களைப் போதிக்கும் மற்றும் செயற்படுத்தும் இடமாகவும், சிறந்த தலைமைத்துவத்தைப் பயிற்றுவிக்கும் நிலையமாகவும் மாற்றப்பட வேண்டும்

.
இவ்வாறு தற்காலப் பாடசாலைகள் மாறி விட்டால், மேலே கூறியது போல நம் இலங்கை நாட்டிலும் கண்டுபிடிப்பாளர்களும், சாதனையாளர்களும் பல்கிப் பெருகுவர். அப்போது தான் இலங்கையும் சர்வதேசத்துடன் ஒப்பிட்டுக் கதைக்கக் கூடிய ஒரு நாடாக மாறும். இல்லையேல், என்றைக்கும் இதே கதி தான்!
பிள்ளைகளுடன் friendly ஆகப் பழகவோ, அவர்களது குறை நிறைகளைக் கேட்டு உதவி செய்யவோ தெரியாத, இன்னும் தம் கடமைக்காக மட்டும் பாடங்களை எடுத்துவிட்டுச் செல்லும் ஆசிரியர்களே! இந்தக் கட்டுரை உங்களுக்கே அர்ப்பணமாகட்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *