(அ)திருப்தி

“எனக்கு இந்த தொழிலில் விருப்பமேயில்ல, எனக்கு இந்த ஒபீஸ் வெறுத்தே போய்விட்டது. இங்க தருகிற சம்பளம் ஒன்றுக்குமே போதுமாக இல்லை”. என்று வேலையில் இருக்கும் சிலர் அலுத்துக்கொள்ளும் போது, degree முடித்தும் வேலை கிடைக்காத பலர் பட்டம் எடுத்து என்ன? பயன் பெற்ற பட்டத்துக்கு ஏற்ற வேலையில்லையே என தாம் பட்டம் பெற்றமைக்கு தங்களையே நொந்து கொண்டு, கிடைக்கும் வேலையைச் செய்து மன அமைதி பெறாமல் பெரிய தொழில் வாய்ப்புக்களைத் தேடி காலத்தைக் கழிக்கின்றனர்.xxcxx
இவர்களின் நிலை இவ்வாறிருக்க, பல வருடங்கள் படித்தும் ஒரு degree பெறமுடியவில்லையே, என உயர் கல்வியைப் பாதியில் நிறுத்தியோர் சிந்திக்க, உயர்கல்வியைக் கற்க ஆசை மற்றும் திறமை இருந்தும் கற்க முடியாமல் போய்விட்டவர்கள் அதற்காக இரவு பகலாக ஏங்கியவாறே தமது காலத்தைக் கடத்துகின்றனர்.
பார்த்தீர்களா சகோதரர்களே, குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக வாழ்க்கையில் வெவ்வேறு கட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் வித்தியாசமாக சிந்திக்கின்றனர். அவர்களின் இவ்வாறான சிந்தனைகளுக்கு அவரவர்களின் தேவைகளில் உள்ள வேறுபாடும் மனதளவில் ஏற்பட்ட வேறுபட்ட தாக்கங்களுமே காரணமாகும்.
   தேவைகளில் வித்தியாசம் காட்டும் இவர்களிடம் காணப்படும் மனோநிலையோ அvhghனைவருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது.
அது எவ்வாறு சாத்தியம் என நிச்சயமாக நீங்கள் சிந்திக்கலாம். ஆனால் அது உண்மையானது.

காரணம், தொழில் வாய்ப்பிலுள்ளவன் தனது தொழிலில் திருப்தியில்லாமலும், பட்டம் பெற்றவன் தான் பெற்ற பட்டத்தில் திருப்தியில்லாமலும், உயர் கல்வி கற்றவன் தனது கல்வியில் திருப்தியில்லாமலும் வேறு ஏதோ ஒன்றுக்காக ஏங்குகின்ற ஒரே மனோநிலையாகும்.
இந்த மனோநிலை பலரிடம் காணப்பட்டாலும், ஏன் சமூகத்தில் பலராலும் அங்கீகரிக்கப்பட்டாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல திருப்தியற்ற மனோநிலை ஒரு மனிதனை காலப்போக்கில் ஒரு நிரந்தர மனநோயாளியாகக் கூட மாற்றலாம்.

இவ்வாறு குறிப்பிடுவதற்காக, உயர்கல்வி கற்றவன் பட்டதாரியாக முயற்சிக்காமல் இருக்க வேண்டும் என்றோ, பட்டதாரியானவன் தகுந்த வேலை தேட வேண்டாம் என்றோ  கூற வருவதாகக் கருதவேண்டாம். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தம் உயர்ந்த இலக்கை அடைவதற்காக முயற்சி எடுப்பதும் அதில் இறுதி வரை போராடி வெற்றி பெறுவதும் கடமையாகும்.bvbbv
தோமஸ் அல்வா எடிசன் தனது முதல் முயற்சியில் திருப்தி அடைந்திருந்தால் இன்று எம்மிடம் மின்குமிழ் இருக்காது. அதே நேரம் அவர் தனது முதல் கண்டுபிடிப்பால் மாத்திரம் திருப்தியடைந்திருந்தால் ஏனைய கண்டுபிடிப்புகள் இவ்வுலகை எட்டிப்பார்த்திருக்காது என எண்ணும் உங்களது எண்ணம் வரவேற்கத்தக்கது தான்.
ஆனால் சகோதரர்களே இது  மனவலிமை, திறமை, முயற்சி போன்ற குணங்களை ஒரு சேரப் பெற்ற ஒரு விஞ்ஞானியின் அதிருப்தியால் ஏற்பட்டது. அதே நேரம் பட்டம் பெற்ற அனைவரும் சிறந்த தொழில் வாய்ப்பைப் பெறத்தவறும் இந்த காலகட்டத்தில் தனக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த தொழிலில் ஒருவன் அதிருப்தி கண்டு தனது கனவுத் தொழிலை நினைத்து எந்நாளும் மனக்கோட்fdtrடை கட்டினான் என்றால், அவனது கதி என்ன? தனது மனக்கோட்டையிலே வாழ்க்கை நடத்தும் ஏனைய அனைத்தையும் மறப்பான், வாழ்க்கையில் நிம்மதி இழப்பான்.
படித்துப் பட்டம் பெற்ற இவனுக்கே இந்த நிலை என்றால் பாவம் குடிசையில் கூழ் குடிக்கும் ஏழைக்கு அவனது செல்வத்தில் அதிருப்தி ஏற்பட்டால் அவனின் நிலை என்ன? நிச்சயம் செல்வத்திற்காக மனம் சொல்லும் செயல்களை செய்வான். அங்கு அவனது மூளை அவனை வழிநடத்துவதற்குப் பதிலாக, அவனது மனோஇச்சை அவனை எவ்வழியிலாவது செல்வந்தனாக மாற வழிநடத்தும். இறுதியில் கூழாவது குடித்து நிம்மதியாக வாழ்ந்த அவன் சிறையிலும் அவன் குடும்பம் நடுத்தெருவுக்கும் உரிமை கோரும் நிலை தான் ஏற்படும்.ghfghfg
பார்த்தீர்களா சகோதரர்களே, நாங்கள் சாதாரண விடயம் எனக் கருதும் இந்த திருப்தியற்ற நிலை படிப்படியாக வளர்ந்து இறுதியில் பேராசையாக மாறி வாழ்வின் அடையாளத்தையே மாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறது.
இதனைத் தான் எமது முன்னோர்கள், ” போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”  எனக் குறிப்பிட்டு உள்ளத்தில் ஏற்படும் திருப்தியான நிலையை பொன்னிற்கு உருவகித்து அதன் பெறுமதியை உலக மாந்தர்களுக்கு எடுத்தியம்பியுள்ளார்கள்.

இது தவிர இன்று வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல ஒவ்வொரு hgggghவீட்டிலும் கணவன் வாங்கிவரும் பொருட்களினால் திருப்தியடையாத மனைவியினதும், மனைவியின் செயல்களில் திருப்தி அடையாத கணவனினதும், பிள்ளைகளின் நன்னடத்தையில் திருப்தியடையாத பெற்றோரினதும், பெற்றோரின் அன்பில் திருப்தியடையாத பிள்ளைகளினதும் மனக்குமுறல்களே நிரம்பிக்காணப்படுகிறது.
பல நாட்கள் குமுறிய எரிமலை ஒரு நாள்வெடிப்பது போல இந்த மனக்குமுறல்களும் ஒரு நாள் வெடித்தால் அந்தக் குடும்பதின் நிலை என்ன? மனிதர்களின் இந்த நிலையைத் தான் நபியவர்கள் குறிப்பிடும் போது, தங்கத்தினாலான உஹத் மலை ஒன்றை அவனுக்கு வழங்கினாலும் இன்னொரு மலையைக் கேட்பான் என்றார்கள்.
ஆனால் சகோதரர்களே, தாம் எத்தகைய வறுமை நிலையில் இருந்தாலும் மனதளவில் திருப்தியாக வாழும் மனிதப் புனிதர்களும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. இத்தகையவர்கள் தமது வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் கழிப்பதுடன் திருப்தியாகவும் வாழ்வார்கள் என்பது யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாததாகும். திருப்தியற்ற மனநிலையுடன் வாழும் பணக்காரனை விட திருப்தியுள்ள மன நிலையுடன் வாழும் ஏழை பன்மடங்கு சிறந்தவனாவான்.jklo

ஆகவே என் இனிய சகோதரர்களே, நிச்சயமாக அவன் நாடியதைத் தடுக்க யாராலும் இயலாது; அவன் தடுத்ததை வழங்கவும் யாராலும் முடியாது எனும் வசனத்தை நினைவில் நிறுத்தி, எமக்குக் கிடைக்க நாடாததைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்து எம்மை விடத் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களைப் பற்றிச் சிந்தித்து வாழ்வில் வளம் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.

“காலிற்கு செருப்பு இல்லை என நான் கவலைப்பட்டேன்; காலில்லாதவனைக் காணும் வரை………”
அல்லாமா இக்பால்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *