உண்மை உறவு

இவ்வுலகில் பல்வேறுவகையான மனிதர்களுடன் பழகுவதற்கும் அவர்களின் தொடர்புகளைப் பெறுவதற்கும் அதன் காலச்சக்கரத்தின் ஒரு முள் எனற வகையில் நாம் பழகியிருப்போம்; ஏன் பழகிக்கொண்டும் இருப்போம். இவ்வாறு பல மனிதர்களுடன் பழகி பல அனுபவங்கள் பெறும் நாம் அவர்களுடனான ஒரு புது உறவையும் வளர்க்க மறந்திட மாட்டோமல்லவா?bhjjhk
பல சமயங்களில் இவ்வாறான புது உறவுகள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கடைபிடிக்காதவர்களின் வாழ்வில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வாழ்க்கையையே சூனியமாக்கும்.
ஆனால் இறைவழிகாட்டலின் கீழ் தன்னை ஒழுங்குபடுத்தும் ஒரு முஸ்லிம் தன் சகோதரர் மற்றும் தன் வாழ்க்கைப் பயணத்தில் தான் சந்தித்த நபர்களுடன், தன் தோழர்களுடன் கொண்டிருக்கும் உறவு ஏனையவர்களின் உறவு முறைகளிலிருந்தும் முற்றாக வேறுபட்டிருக்கும்.

காரணம் இறைமறுப்பாளரின் உறவோ வெறும் உலகத்தேவைகளுக்காகவும், சுயநலத்திற்காகவும் ஏனையை சிறிய உடனடித்தேவைகளுக்காகவுமே ஏற்படுத்தப்படுவது தவிர எந்த வித உள்ளார்ந்த உணர்வுகளையோ, உண்மையான அன்பையோ அங்கு எதிர்பார்ப்பது மிகக் கடினமாகும்.
அதேவேளை இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட முஸ்லிம்களின் உறவானது அல்லாஹ் ஒருவனுக்காகவும் அவனது திருப்திக்காகவுமே அமைத்துக் கொள்வான்.                                                                 இவ்வாறு அல்லாஹ்வுக்காக சகோதரத்துவம் கொள்ளும் விடயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கிடையிலும் எவ்வித வித்தியாசமும் இல்லை. இந்த ஓர் இணைப்பைக் கொண்டு தான் அல்லாஹ் தன்னை நம்பிக்கை கொண்டவர்களை இணைத்துள்ளான். “நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே” என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளமை இதற்கு சான்று பகர்கிறது.
இது தவிர, மேலே குறிப்பிட்டதன் படி இறைநம்பிக்கையால் ஏற்படுகின்ற சகோதரத்துவம், நட்பு கொண்ட முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் உறுதியான உறவுடன் இருப்பார்கள். அவர்களுடைய உறவு அல்லாஹ்வின் அடிப்படையாக வைத்து அமைந்ததாகும். இந்த அன்புதான் மனித வாழ்க்கையில் மிகத்தூய்மையானதும்               அழுdgfgdக்கற்றதுமாகும். இந்த அன்பு தன்னலமற்றது; பலனை எதிர்பார்க்காதது. இந்த அன்பின் மூலமாக முஸ்லிம்கள் இறைநம்பிக்கையின் சுவையைப்பெற்றுக் கொள்கின்றார்கள்.                                          ஏனெனில் இவ் அன்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்திருக்குமோ, அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.

அவை,
அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்ற அனைத்தையும் விட அன்புக்குரியவர்களாக இருப்பது,
ஒருவர் மற்றவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது,
நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல இறைநிராகிப்பிற்குத் திரும்பிச் செல்வதைவெறுப்பது.” (புகாரி முஸ்லிம்)

எனக் குறிப்பிட்டு அல்லாஹ்வுக்காக ஒருவருடன் நேசம் கொள்வதன் சிறப்பை உலக மாந்தர்களுக்கு ,.எடுத்தியம்பியுள்ளார்கள்.

இது தவிர இம்மையின் அற்ப ஆசைகளுக்காக அன்றி அல்லாஹ்வுக்காக தங்கள் உறவுகளை தம் உடன் பிறவா சகோதரர்களுடன் அமைத்துக்கொள்ளும் தூய உள்ளத்தினரைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ்,

இவர்கள் எந்த வித நிழலும் இல்லாத அந்த மஹ்ஷர் மைதானத்தில் தன் நிழலில் இடம் அளிக்கப்படுவார்கள் எனக் கூறி, இவ்வாறானவர்களின் அந்தஸ்தை மேலும் அதிகரிக்கின்றான். அது மட்டுமா சகோதரர்களே,

தூய உள்ளத்துடன் பிறருடன் பழகும் மனிதன் தமது சுயநலத்துக்காக பிறரை ஏமாற்ற மாட்டான்; பிறருக்கு நோவினை செய்ய மாட்டான்; மனதில் வஞ்சக எண்ணத்துடன் பிறருக்கு தீங்கிழைக்க மாட்டான்; பிறரை கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க மாட்டான். இத்தகையவனை உண்மையான சிறந்த ஒரு சமூகம் வெறுக்குமா? இல்லாவிட்டால் மக்கள் தான் இத்தகையவர்களை ஒதுக்குமா? நிச்சயம் இல்லை. இவ்வாறானவர்களின் தூய உறவினால் கவரப்பட்டு இவர்களது குடும்பம் மாத்திரமின்றி முழு மனித சமூகமுமே gfgfஇவர்களின் அன்புக்கு அடிமையாகி விடுவர்.
ஆரம்பத்தில் மிகச் சிலருடன் ஆரம்பிக்கப்பட்ட எம் தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி முழு பிரபஞ்சத்திற்குமே வியாபிக்கக் காரணம் என்ன?
காபிர்களின் குற்றச்சாட்டுகள் போல இஸ்லாம் வாளாலும் போராலும் அடக்குமுறைகளாலும் அட்டூழியங்களாலுமா பரப்பப்பட்டது ? நிச்சயம் இல்லை.

இது அல்லாஹ்வின் உதவியாலும், நபியவர்களினதும், அவர்களின் தூய அன்பினால் கவரப்பட்டு அல்லாஹ்வுக்காக அவர்களுடன் உண்மையான தோழமை கொண்ட சஹாபாத்தோழர்களினதும் தியாகத்தினாலும் மக்கள் மனதில் ஆழ வேரூன்றிய மார்க்கமாகும். இவ்வாறு  மக்கள் மனதில் ஆழ வேரூன்றுவதற்கு நபியவர்களின் தூய உள்ளமும் மக்களுடனான உண்மை உறவும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது.
மக்கா வெற்றியின் போது தம்மை தமது சொந்த ஊரிலிருந்து வெளியேற்றிய காபிர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை, தனது பள்ளிவாயலில் அசுத்தம் செய்த காட்டரபிக்கு மன்னிப்பளித்து தானே அதை சுத்தம் செய்தமை, தனது முதுகில் அசுத்தத்தை இடும் பெண் நோய்வாய்ப்பட்டதும் சென்று நோய் விசாரித்தமை போன்ற பல செயல்கள் நபியவர்களின் உள்ளத்தையும் அதில் காணப்படும் உண்மை அன்பையும் மக்களுடனான தூய உறவையும் பறைசாற்றி மனித சமூகத்திற்கே சிறந்த ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது.

ஆகவே சகோதரர்களே,
பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மத்தியில் அல்லாஹ்வுக்காக என்ற தூய உறவு உதிக்குமானால் எமது முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின் சிகரத்தையே தொட்டு வெற்றி பெற்ற சமூகமாக இம்மையிலும் மறுமையிலும் இன்ஷா அல்லாஹ் திகழும் என்பதை உணர்ந்து எமது மத்தியிலான எம் உறவுகளை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மாற்றியமைப்போம். ஆமீன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *