உறவுகளை முறித்துவிடும் தொலைபேசி

இன்றைய நவீன காலத்தில் தொழிநுட்பம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. விதவிதமான தொலைபேசிகளும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. CDMA, LAND PHONE எனத் தொடங்கி SAMSUNG, APPLE, NOKIA, SONY, HUAWEI… போjhhuன்றவற்றுடன் CHINESE BRAND எனக் குறைந்த விலையிலும் தொலைபேசிகள் நம் நாட்டில் பரவலாக விற்பனைக்கு வந்து உள்ளன. தற்போது தொலைபேசிகள் இல்லாத எந்தவொரு வீட்டையும் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?   முடியாது தானே. அந்த அளவுக்கு நமக்கும் தொலைபேசிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஒன்று போதாதென்று இரண்டு, மூன்று.. தொலைபேசிகள் வைத்துக்கொள்பவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர். எது எப்படியாக இருந்தாலும் சரி, சற்று இங்கே கவனித்துப்பாருங்கள் தோழர்களே!
தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டதன் நோக்கம் தொலைவிலுள்ள உறவுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கே என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனினும் தற்காலத்தில் தொலைபேசிகள் உறவுகளைப் பிரிக்கின்ற ஒரு சாதனமாக மாறி வருகின்றமை கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

அது எப்படி சாத்தியமாகும்?fht என யோசிக்கிறீர்கள் போலும் கூறுகின்றோம். அறிந்துகொள்ளுங்கள்;தற்காலத்தில் தொலைபேசி பாவிப்பவர்களில் அனேகமானோர் தங்கள் பணம்முடிந்து விடுமோ என்று MISSED CALL கொடுக்கின்றனர், சிலர் வேடிக்கை விளையாட்டாகவும் இதை செய்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் தொலைபேசிக்கு உள்வரும் அழைப்புகளை மாத்திரம் ATTEND செய்கின்றனர். அவர்கள் இலகுவில் யாருக்கும் அழைப்புகளை மேற்கொள்வதில்லை. சில முக்கிய தேவைகளுக்காக மட்டுமேmn அழைப்புக்களை மேற்கொள்கின்றனர்.
அண்மையில் நண்பர் ஒருவருடன் உரையாடக்கிடைத்தது. அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் அவரின் உறவுகளைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கையில் தாய் மாமாவைப் பற்றியும் விசாரித்தேன். அதற்கவர், “அதை ஏன் கேக்குறீங்க, உறவ மதிக்கத்தெரியாதவங்க!” என்று அங்கலாய்த்தார். ஏன் என்ற எனது கேள்விக்கு அவர் சொன்னார்;       “நானும் நீயும் எவ்வளவு தூரத்தில இருந்தாலும் மாசத்துக்கு ரெண்டு, மூனு தடவ பேசிக்கொள்றோம் தானே. ஆனா எண்ட மாமா இருக்கிறாரே, வருஷத்துக்கு ஒரு தடவயாவது பேசுவாரா என்பது கூட சந்தேகம். எவ்வளவோ நாளைக்கு முந்தி, அண்ணளவா ஒன்னரை வருஷம் இருக்கும், அவங்கட மகள்ட கலியாணத்துக்கு வர சொல்லி கோல் எடுத்திருந்தார். அவருட மகளுக்கு இப்ப பிள்ளையும் கிடச்சிடிச்சு. சென்ற கிழம தான், மகளுட புள்ளைக்கு நாப்பது, எல்லாருக்கும் சாப்பாடு வெக்கிறோம் என்று மீண்டும் கோல் எடுத்திருந்தார்…. நாங்க ஒத்தரும் சாப்பாட்டுக்குப் போகல்ல. நாங்க யாரும் இப்ப அவர கணக்கெடுக்குறதும் இல்ல, பேருக்குத்தான் மாமா, அவர மாமா என்டு சொல்வதற்கே வெட்கம்….” என்றார்.
இதனால் அவர் தற்போது தன் தாய் மாமனின் குடும்பத்தையே வெறுக்கின்றார். மாமனுடன் இருந்த உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. இனி ஒரு போதும் எதற்காகவும் தன் மாமனின் குடும்பத்தையே எதிர்பார்க்க மாட்டார் அல்லவா?
இத்தனைக்கும், கோல் எடுத்தால் தன்னுடைய தொலைபேசியில் பணம் முடிந்து விடும், முடிந்தால் ரீசார்ஜ் பண்ண வேண்டி வருமே! என்ற எதிர்மறையான கருமித்தன சிந்தனைகளே காரணம். இதே போன்று தான் MISSED CALL பண்ணுபவர்களும்.
சகோதரர்களே! இவ்வாறான சிறுசிறு செயற்பாடுகளால் மானிட சமூகம் பிரிவடைவது சர்வ சாதாரணமாகிக்கொண்டு வருகின்றது. சமூகreத்தின் அடிப்படையான குடும்பமே இவ்வாறு பிரிவடையும் போது ஒரு போதும் சமூக ஒற்றுமையைக் காப்பாற்ற முடியாது என்பது உறுதியாகின்றது.
இவ்வாறு இன்னும் பல நிகழ்ச்சிகளை நீங்களும் நாங்களும் தினம்தினம் கேள்விப்படுகிறோம் அல்லவா? எவ்வளவு சந்தோசமாக, குடும்பமாக சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டிய முஸ்லிம் சமூகம் சிறு காரணங்களுக்காக பிளவு பட நாம் இடமளிக்கக்கூடாது தானே.

இந்தத் தகவலை வாசிக்கும் சகோதரர்களே நீங்களும் அவ்வாறிருந்தால் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். இன்னும் இத்தகவலை மற்றவர்களுக்கும் எத்தி வையுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *