மனம் வைத்தால் வெற்றி பெறலாம்

 

 “எந்தத் தொழில் செய்தாலும் எனக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வாழ்வில் என்னால் முன்னேற முடியவில்லையே, என்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தவன் இப்போது எனக்கே முதலாளியாகி உள்ளான், இரவு பகலாக வேலை செய்தாலும் என்னால் என் இலக்கை அடைய முடியவில்லையே” என்ன சகோதரர்களே, உங்கள் வாழ்விலும் இதே நிலையா? எவ்வளவு தாbvbvன் முயன்றாலும் தோல்வி உங்களைத் துரத்துகிறதா? அதனால் நீங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளீர்களா?  நான் இனி எந்தத் தொழில் செய்தாலும் இதே நிலை தான் என நினைத்து இனிமேல் எந்தவொரு முயற்சியும் செய்ய மாட்டேன் என முடிவே எடுத்து விட்டீர்களா?ghgசரி சகோதரர்களே, வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பற்றி நினைத்தே வாழ்வின் அரைவாசியைக் கழிக்கும் நீங்கள் ஒரு நாளாவது நீங்கள் கடந்து வந்த பாதையில் சந்தித்த வெற்றிகளையும் அனுபவித்த மகிழ்வுகளையும் சிந்தித்திருக்கிறீர்கள்? அல்லது அன்று நீங்கள் குவித்த வெற்றிகளைக் கண்டு அகமகிழ்வாவது அடைந்துள்ளீர்களா? இல்லை. நிச்சயம் இல்லை. அவற்றைப் பற்றி நினைக்க நேரம் எங்கே? அது மட்டும் இல்லாமல் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” அல்லவா அதை நினைத்து என்ன பயன்? அப்படித்தானே?
இது மிகவும் தவறான வாதமாகும். காரணம் ஒருவர் ஒரு செயலில் இறங்கும் முன் அவர் அவரின் மீதே நம்பிக்கை கொள்ள வேண்டாமா? தன்னால் முடியும் எனும் மனப்பாங்கை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டாமா? நிச்சயம் ஒருவரின் மனப்பாங்கு அவரின் வெற்றியில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்துகிறது.
இது தவிர இந்த மனப்பாங்குடன் சேர்த்து ஒருவரின் தன்னம்பிக்கையும், அவரின் மனோநிலையும் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனாலும் இவற்றிற்கும் முன்hkhபு கூறப்பட்ட “பழைய வெற்றிகளை மீட்டுவதற்கும் என்ன தொடர்பு என சிந்திக்கிறீர்களா?
கொஞ்சம் பொறுங்கள்; கடையில் ஒரு பொருளை முக்கியமான ஒரு தேவைக்காக நீங்கள் வாங்கப் போகின்றீர்கள் என்றால் அவ்வேலையைச் சிறப்பாக முடிக்க சிறந்த, பலரால் பரிந்துரைக்கப்பட்ட, பொருளைத்தானே வாங்குவீர்கள்? அது மட்டுமல்லாமல் நீங்கள் வாங்கிய பொருளின் சிறந்த தொழிற்றிறனை பார்த்தோ கேட்டோ விட்டால் குறித்த அப்பொருள் மீது ஓர் அசையா நம்பிக்கையும் நீங்கள் செய்ய நினைத்த வேலையின் அரைவாசியே முடிந்து விட்டதாகவும் நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள் தானே,
சாதாரண ஒரு பொருளை அதன் பரிந்துரைகளைக் கொண்டு நம்பி அதன் மேல் முழு நம்பிக்கை வைத்து குறித்த வேலையைச் செய்வதற்கு மன உறுதியுடன் முன் வருகிறீர்களே, உங்களின் இயலுமை ஏன் உங்கள் இயலாமையை நீங்கள் யாரிடம் போய் கேட்கப் போகிறீர்கள்?
தங்களைப் பற்றியே முழுமையாக அறிந்து வைத்திராத இந்த மானிட சமூகத்தில் உங்கள் ஆளுமைகளைப் பற்றி உங்கள் கடந்த காலத்தைத் தவிர வேறு யார் மிகத்துள்ளியமாகக் கூறிfghhவிடுவார்?fgfhgh
உங்கள் கடந்த கால வெற்றிகள் உங்களுக்குப் புது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். உங்கள் எதிர்மறையான சிந்தனைகளை நேர்மறையானதாக மாற்றும். உங்களுக்குச் சிறந்த மனப்பாங்கை ஏற்படுத்தி உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைப் பாதைக்கான பயணத்துக்கும் புதுத் தெம்பு அளிக்கும். அது மட்டுமா? நீங்கள் கடந்து வந்த பாதையில் நீங்கள் பெற்ற தோல்விகள் உங்களுக்கு அனுபவமுள்ள ஆசானாக மாறி உங்கள் பயணத்தை இன்னும் செப்பமாக்கும். இது தவிர உங்கள் தோல்விகள், நீங்கள் விட்ட பிழைகள் பலாராலும் மறைக்கப்பட்ட உங்கள் குறைகளை உங்களுக்கு மட்டும் காட்டி உங்களைச் சீர்த்திருத்தம் செய்யும்.
சரி சகோதரர்களே, எவ்வளவு தான் முயற்சித்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில்  பலர் தோல்வியிலே துவண்டு விடுகின்றனர். இத்தகையவர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டு தமது தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர்.
இவ்வாறு தோல்வியை தம் இறுதி முடிவாக ஆக்கிக் கொள்வதற்குக் காரணம் தான் என்ன? vnvnbnஅவர்கள் முயற்சிக்க வில்லையா? இல்லை தியாகம் செய்யவில்லையா? எல்லாம் செய்தார்கள்; ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லை; தம்மீது நம்பிக்கை கொள்ளவில்லை, தம் திறன் மீது நம்பிக்கைக் கொள்ளவில்லை. தம்மால் இதைச் செய்ய முடியாது என சில செயல்களைப் பட்டியல் போடத்தெரிந்த அவர்களால் தங்களுக்கு இதைச் செய்ய முடியும் என தம்மீது நம்பிக்கைக் கொள்ளத் தெரியவில்லை.
இதைப் பற்றி அமெரிக்காவில் வாழும் மிகப் பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவரான ஆர்தர் எல்.வில்லியம்ஸ் என்பவர் குறிப்பிடும் போது, “அமெரிக்காவில் இன்று வெற்றி பெறுவதிலிருந்து தடுத்துக் கொண்டிருக்கும் முதன்மைப் பிரச்சினை அவர்களுக்குத் தங்கள் மீது நம்பிக்கை இல்லாதது தான்” எனக் குறிப்பிடுகிறார். அது தவிர நாம் அனைவரும் அறிந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், “வேறு யாரும் உங்களை நம்பாதபோது நீங்கள் உங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அது தான் உங்களை ஒரு வெற்றியாளராக உருவாக்கும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார். ddgf
இத்தகையவர்களின் கருத்துக்களின் படி இங்கு முன்பு கூறப்பட்டவாறு ஒருவர் பெற்றுக்கொள்ளும் அனுபவம் அவரின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. காரணம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைத் தேடும் ஒரு மனிதன் தனது ஒவ்வொரு அனுபவத்தையும் தனது வெற்றிக்கான பாதையை இலகு படுத்தும் கருவிகளாகக் கண்டு கொள்வான்.
வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து என்ற மிகப் பிரபல்யமான புத்தகத்தை எழுதிய ஜாக் cbcbகேன்ஃபீல்டு என்ற நூலாசிரியர் அவரது புத்தகத்தில், “ ‘இதில் எனக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது’ ? என்ற வார்த்தைகள் எழுதப்பட்ட ஒரு சிறிய அட்டையை உருவாக்கி அதை உங்கள் மேசை மீதோ அல்லது கணினிக்கு மேலேயோ வையுங்கள். நீங்கள் அதைப்பார்க்கும் ஒவ்வொரு வேளையிலும் உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளிலும் நல்லதைத் தேட அது உங்களுக்கு நினைவூட்டும்.” என வெற்றியாளராவதற்கு அனைத்து செயற்பாடுகளிலும் வாய்ப்புக்களைப் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இது தவிர ஒருவரின் வெற்றிக்கு அவர்களின் மனப்பாங்கு பெரும் பங்கு வகிக்கிறது
அதெப்படி? சாதாரண மனப்பாங்கிற்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு என சிந்திக்க வேண்டாம். அந்த சாதாரண மனப்பாங்கு தான் மனிதன் நினைத்தால் சாதனைகள் பல புரியும் வல்லமை மிக்க மனப்பாங்காக மாறி மனித வாழ்வையே மாற்றும்.
இதனால் தான் வில்லியம் ஜேம்ஸ் எனும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் மன நல நிபுணர் கூறுகையில்,
“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்”.hjhh
இதன் படி ஒருவன் தனது மனோநிலையை நேர் மனப்பாங்காகவோ அல்லது மறை மனப்பாங்காகவோ மாற்றிக்கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெரிய ஹதீஸின் இறுதியில்,  “ஒவ்வொருவரும் தாம் நாடியதைப் பெற்றுக் கொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டார்கள். மேலும் சிறந்த தொழில் அதிபராகவும் சமூகம் விரும்பும் பேச்சாளராகவும் திகழும் பால் ஆர். ஷீலீ என்பவர், “ ‘என்னால் முடியாது’ என்பது தான் மனித உளவியலிலே மிகவும் சக்திவாய்ந்த எதிர்மறைச் சொற்றொடராக விளங்குகிறது” எனக் குறிப்பிட்டார்.
அதே வேளை  முயற்சி, தன்னம்பிக்கையுடன் bvnvசேர்த்து நான் இதை வெல்வேன், என்னால் முடியும், என் இலக்கை அடைந்து நான் எதிர்பார்த்தபடியே வாழ்க்கையில் சிகரம் தொடுவேன் போன்ற நேர்மறை மனப்பாங்கும் சேர்ந்தால், நிச்சயம் அவன் நினைத்தவாறு வெற்றி அவன் முன் மண்டியிடும்.
சரி சகோதரர்களே, வெற்றி என்பது எட்டாக்கனி; அதை எட்டிக் கைப்பற்றிக்கொள்வது மிகவும் இயலாத காரியம் என நினைத்து நினைத்தே இனி பொன்னான காலத்தை மண்ணாக்கி விட வேண்டாம். நாம் எமது எதிர்மறைச் சிந்தனைகளை நேர்மறையானதாக மாற்றி வாழ்வில் வெற்றி எனும் இலக்கை  இறைவன் துணையுடன் அடைவோம்.
“ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை”.
லியோ டால்ஸ்டாய்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *