பெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

                         “அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க மாமி எப்படி சுக செய்தி? என்ன விஷயமா இவ்வளவு தூரம் வந்திருக்கிறீங்க”?  “வ அலைக்கும் ஸலாம் மகள். முக்கியமாக ஒரு விஷயமும் இல்லை சும்மா Time pass க்காக கொஞ்சம் இந்தப் பக்கம் எட்டிப்பார்த்து விட்டு போகலாம் என்று வந்தேன் மகள். ஆனால் வருகிற வழியில உன் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கண்டேன்; அவவோட மிச்சம் கவனாமாக இருக்க வேண்டும்.; அவ . . . . . . .”

uop    என்ன சகோதரர்களே, உங்கள் வீட்டிலும் இப்படியான உரையாடல்களைக் கேட்டிருப்பீர்களே? வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல பெரும்பாலான வீடுகளில் பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்தால் போதும்; இஸ்லாம் கூறும் ஸலாத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அவர்களின் கதையோ திரைக்கதை, வசனம் என்று ஆரம்பிக்கப்படும். ஆரம்பிக்கப்பட்ட கதை இலகுவில் முடிந்து விடுமா? முடியவே முடியாது. பாதையில் போகும் யாரோ ஒருவரைப் பற்றி ஆரம்பித்த கதை எங்கெங்கெல்லாமோ சுற்றி இறுதியில் சம்பந்தமே இல்லாத ஒருவரிடம் போய் முடியும்.

அது மட்டுமா? பலரது வாழ்க்கை விவகாரங்களையும் அசைபோடும் இவர்களின் உரையாடல்களின் மத்தியில் தொடர் நாடக நடிகைகள், நடிகர்களும் எட்டிப்பார்க்கத் தவறுவது இல்லை. நேற்றைய நாடகத்தில் நடந்த நிகழ்வை ஒருவர் கூற, அதில் நடித்த நடிகர், நடிகைகளைப் பற்றி இன்னொருவர் விமர்சிக்க, அந்த விமர்சிப்புக்கு எதிராக இன்னும் ஒருவர் கருத்துத்  தெரிவிக்க, இவர்களது வெட்டிப் பேச்சோ வேலியின்றித் தொடரும். நேற்றைய நாடகத்தைப் பற்றிய கதை முடிய முன்பே இன்றைய தொடரைப் பற்றிய எதிர்வுகூறல் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தாங்களாகவே அத்தொடர் கதைக்கு முடிவுரை அமைத்து விடுவார்கள்.hjhkhk

ஆம் சகோதரர்களே, இத்தகையவர்கள் தங்கள் வீடுகளில் மாத்திரம் தானா தங்கள் வெட்டிப் பேச்சை வளர்ப்பார்கள்? நிச்சயம் இல்லை; எவ்விடமும் அவர்களுக்குச் சம்மதம் என்பது போல எவ்விடத்தில் அவர்கள் ஒன்று கூடினாலும் அங்கே அவர்களின் வெட்டிப் பேச்சாளர் கூட்டம் ஆரம்பிக்கப்படும். அந்த அடிப்படையில் திருமணவீடு, மைய்யத்து வீடு, ஏனைய பாடசாலை ஒன்றுகூடல்கள் போன்ற பட்டியலில் ஆரம்ப காலத்தைப் பொறுத்தவரையில் ஆற்றங்கரை முக்கிய இடம் வகித்தது. ஆனால் இன்றைய காலத்தில் ஆற்றங்கரை ஒன்றுகூடல் சாத்தியம் இல்லை என்பதால் இவர்களது ஒன்று கூடலில் பிரதான பாத்திரம் வகிப்பது மைய்யத்து வீடாகும்.

காரணம், அங்கு தமது கூட்டத்திற்கு பெருமளவு அங்கத்தவர்கள் கிடைப்பார்கள். அது தவிர அன்றைய பேச்சு பொருளாக அன்றைய மைய்யத்து பற்றியதாகவே இருக்கும். அருகில் இல்லாதவரைப் பற்றிப் பேசுவதென்றால் அவர்களுக்குச் சொல்லித்தான் கொடுக்க வேண்டுமா? சில வேளை குறித்த மைய்யத்தின் நல்ல செயல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்த அவர்கள் தமது பாதை மாறி மைய்யத்தின் கெட்ட குணங்கள், அவர் செய்த தீய விடயங்கள் என நபி (ஸல்) அவர்கள் மைய்யத்து வீட்டில் எதை வெறுத்தார்களோ அதை மிக நேர்த்தியாகச் செய்து விடுவார்கள். அது மட்டுமா? மைய்யத்து வீட்டில் கிடைத்த தகவல்களை வீட்டில் வந்து ஒப்புவிக்கவும் அவற்றுக்கான விமர்சனங்களைக் கூறவும் இவர்கள் தவறுDGFவது இல்லை.

தமது வாழ்க்கைப் பயணத்தையும் இவ்வாறு கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சகோதரியா நீங்களும்? உங்கள் வாழ்வைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள்! Time pass க்காக யாருடைய வீட்டையாவது வலம் வருகிறீர்களே, உங்கள் வீட்டில் தூசுக்கு மத்தியிலும் ஒளி மங்காமல் இருக்கும் அல் குர் ஆன் பிரதியை ஒரு நாளேனும் எடுத்து வாசித்திருப்பீர்களா?

ஒரு இடத்தில் கூட்டமாக இருந்து யாரோ ஒருவரைப் பற்றிப் புறம் பேசி ஹராமான உங்கள் சகோதரனின் இறைச்சியை கவலையே இன்றி சுவைக்கிறீர்களே, மார்க்கம் சம்பந்தமான ஏதாவது ஒரு கட்டுரையேனும் அந்தக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டிருந்தால் உங்கள் ஒன்று கூடல் எவ்வளவு சிறப்பாய் இருந்திருக்கும்? இஸ்லாமியப் பிரச்சாரம் கூட சிறிய கூட்டத்திலிருந்து தான் ஆரம்பமாகியது என்பதை மறந்து விட்டீர்களா என் இனிய சகோதரிகளே? தொடர் நாடகத்தில் வரும் நடிகர்,நடிகைகளைப் பற்றிக் கலந்துரையாடிய உங்கள் நாவுகள் ஏன் எமது மார்க்கத்திற்காய் உயிர் நீத்த வீரத்தியாகிகளைப் பற்றிக் கதைக்கத் தவறின?hghjgh

அது மட்டுமா சகோதரிகளே, மைய்யத்து வீட்டில் மைய்யத்தின் குறைகளை வெளியே கக்கிவிடத் துடிக்கும் உங்கள் உள்ளங்கள் தாமும் ஒரு நாள் இந்த நிலையை அடைவோம் என அச்சம் அடைய மறுப்பது ஏன்? இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமானது என்றும் தாம் மரணமே அற்ற அதிசயப் பிறப்புக்கள் என்றும் ஏதாவது எண்ணங்கள் உங்கள் மனங்களில் தவழ்கின்றவா?

நாளை மறுமையில் நரகில் அதிகமாகப் பெண்கள் இருப்பது நியாயம் தானே என் இனிய இஸ்லாமிய சகோதரிகளே? நீங்களும் அந்த நரக நெருப்புக்குத் தீனியாகப் போகிறீர்களா? நிச்சயமாக நீங்களும் நானும் நரக நெருப்புக்குத் தீனியாவதை அல்லாஹ் கூட விரும்பமாட்டான்.rtetr

ஆகவே சகோதரிகளே, இன்றிலிருந்து இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் தடுத்துள்ள புறம் பேசல், கோல் சொல்லல், குறை கூறல் போன்ற நடத்தைகளை விட்டும் தவிர்ந்து சுவனத்திற்குச் சொந்தக்காரர்களாகுவோம். ஆமீன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *