உடல் நலம்

dgdggஉடல் நலம் வல்ல இறைவனின் தனிப்பெரும் அருட்கொடையும், மாபெரும் அமானிதமுமாகும்.எமது உடலின் அக அங்கங்களை நாம் சற்று நோட்டமிட்டால், மிகச் சிறந்த படைப்பாளனான இறைவனின் படைப்பாற்றலை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட எமது உடலின் நலத்தைப் பேணாமல் அலட்சியம் செய்து விட்டால் வாழ்வில் மிகப் பெரும் நட்டத்தை வாங்கியவர்களாகுவோம். அற்ப கரையான் பெரிய பெரிய நூல்களை அரித்து அழித்து விடுவது போல உடல் நலம் பேணாமை எமது வாழ்வையே அழித்து விடும்.
அறிவு, செல்வம், முயற்சி போன்ற அனைத்தும் உள்ள ஒரு உடல் நலம் இல்லாத மனிதனால் குறித்த ஒரு செயலை நிறைவேற்ற முடியுமா? நிச்சயம் முடியாது. உடல் நலம் சீரற்றவனின் உளநலம் தானாகவே குறைந்து சோர்ந்து விடும். சீரற்ற உள்ளத்துடன் நிறைவேற்றும் செயற்பாடுகள் உயிர்த்துடிப்பற்றதாகக் காணப்படும். அதனால் வாழ்வில் சாதனைகளும் வெற்றிகளும் வெகு தூரத்துக்குச் சென்று விடும்.dddddd
அல்லாஹ்வின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்ட மனிதன் அவனுக்கு அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றக் கடமைப் பட்டுள்ளான். இந்தக் கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டுமாயின் மனிதன் என்பவன் திடமானவனாகவும், உயிர்த்துடிப்பானவனாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து அவன் சோர்விழந்த, உற்சாகமற்றவனாக இருப்பான் என்றால் அல்லாஹ் விரும்பும் சிறந்த பிரதிநிதியாக எப்படி விளங்குவான்?
addஅதனால் தான் சிறந்த உடல் நிலையைப் பெற விரும்பும் மனிதன் தனது சொந்த நலனில் மட்டும் இன்றி அல்லாஹ்வின் பிரதிநிதியாகத் திகழ்ந்து இஸ்லாத்திற்காக உழைக்கவும் பூரண உடல் தகுதியையும் பெற்று உளத்தகுதியை உடையவனாகின்றான்.
மேலும், இயற்கையாக சிறந்த உடல் நலத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன் தனது மிகையான உழைப்பினால் உடல் வலிமையை இழந்து விடுவதை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில், “உங்கள் சக்திக்கேற்றவாறு மட்டுமே பணிகளைச் செய்யுங்கள். ஏனெனில், இறைவன் சோர்வடைவதில்லை; நீங்கள் தான் சோர்வடைந்து விடுகிறீர்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதாரம் : புகாரி
அது தவிர ஒரு பெரிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் நபியவர்களைக் கண்டு விட்டுச் சென்ற ஒருவர் சென்ற நாள் முதல் நோன்பு நோற்பவராகக் காணப்பட்டமையினால் அவரின் இயற்கைத்தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட நபியவகள் அவரின் செயலைக் கண்டித்து நோன்பு பிடிப்பதற்காக சில நாட்களை நிர்ணயித்துக் கொடுத்தமையும் தன்னைத்தானே வருத்திக் கொள்வது ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு அழகல்ல எனக் கூறியமையும் இஸ்லாம் உடல் நலத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.xxdfd
இவற்றுக்கப்பால் சிறந்த உடல் நலத்தைப் பெறவும், வீரத்தைப் பெறவும் நபியவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுக்களைக் கற்றுத்தந்திருப்பதுடன் அவற்றிற்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்துள்ளார்கள். குதிரையில் சவாரி செய்தல், அம்பு எய்தல், நீரில் நீந்துதல், ஓட்டப் போட்டியில் ஈடுபடல் போன்றவை நபி (ஸல்) அவர்கள் விரும்பி விளையாடிய விளையாட்டுக்களாகும்.
இது தவிர உடல் நலத்திற்கு சிறந்த உடற்பயிற்சியை மேற்கொள்வது கட்டாயமாகும்.தொடர்ந்து தண்ணீர் இறைப்பது, நிலத்தில் உழைப்பது, நீந்துவது, ஓடுவது, சைக்கிள் விடுவது, போன்றவை சிலவாகும்.
ஒருநாளைக்குக் குறைந்தது 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை தொடர்ந்து உடற்பயிற்சியைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
இரத்த ஓட்டம் சீரடையவும், உணவுகள் சீரணம் அடையவும், உடல் உறுப்புகள் உறுதியடையவும், அழகான உடலைப் பெறவும் இந்த உடற்பயிற்சியும் விளையாட்டும் பயன்படுகிறது.dfss

இன்னும் உடல் நிலையைப் பேண அமைதியான மனோநிலை இன்றியமையாததாகும். இன்றைய நவீன காலத்தில் பல வகையான பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதனுக்கு அமைதியான மனோநிலை சாத்தியமற்ற ஒரு விடயமாக விளங்கினாலும் சிறந்த உடல் நிலைக்கு இது அவசியமாகும்.

எப்போதும் புன்னகைப்பவராக நபி (ஸல்) அவர்கள் காணப்பட்டமையும் மக்களை அதற்குத் தூண்டுபவராக இருந்தமையும் அவர்கள் சிறந்த மனோநிலைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அறியலாம்.sfs

சிறந்த உடல் நிலைக்கு இவற்றுடன் நல்ல பழக்கவழக்கங்கள் இருப்பது முக்கியமானதாகும். மது, சிகரட், போதை வஸ்த்துக்களை விட்டும் தவிர்ந்து நடப்பது கொடூர நோய்களில் இருந்து மனிதனைப் பாதுகாக்கும்.

ஒரு மனிதனின் நல்ல உணவுப் பழக்கம் உடல் நலத்தைப் பேண பெரும் பங்காற்றுகிறது. இன்று எம் மத்தியில் மிக மலிந்து காணப்படும் துரித உணவுகள் எமக்கு பல்வகையான உயிராபத்துக்களை விளைவிக்கும் ஆற்றல் கொண்டவை என நவீன ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ளன. எமது உடல் நிலை சிறக்க வேண்டும் எனின் இயற்கை உணவுகளை உண்ணல், அதிகமாக நீர் அருந்துதல் போன்ற உணவுப்பழக்கங்கள் எம்மத்தியில் பரவ வேண்டும்.
ஆகவே சகோதர சகோதரிகளே, இஸ்லாம் காட்டும் முறையில் எமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சிறந்த உடல் நலம் உள்ளவர்களாக மாறுவோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *