பொறுமை

பூரண வாழ்க்கைத் திட்டமான எமது இஸ்லாமிய மார்க்கம் தன்னைப் பின்பற்றும் தனது அடியார்களுக்கு அவர்களின் இம்மை, மறுமை வாழ்வை சிறப்பாகக் கொண்டு செல்ல பல வழிகளைக் காட்hkyiyiடித்தந்துள்ளது. அதன் படி ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொறுமையைக் கடைபிடிப்பது அல்லாஹ்வாலும் நபியவர்களாலும் கடமையாக்கிய ஒரு விடயமாகும்.

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200

எனும் வசனம் அல்லாஹ் பொறுமையாளர்களுக்குக் கொடுக்கும் வெகுமதியைப் பற்றிக் குறிப்பிடுகிறான். இது தவிர பொறுமையைக் கடைபிடிப்பதும், அதன் படி வாழ்வதும் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடையாகவே கருதப்படுகிறது.

எவனொருவன் (தன் வாழ்வில்) துன்பங்கள் நேரிடும்போது அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் சகிப்புத் தன்மையை வழங்கி விடுகிறான். (துன்பங்களைச்) சகித்துக் கொள்ளும் தன்மையை விட சிறந்த ஒரு அருட்கொடையை எவரும் பெற்றதில்லை. அபூசையித் அல் குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லிம்

என நபியவர்கள் குறிப்பிட்டுள்ளமை பொறுமை எனும் அணிகலன் இறைவனின் மாபெரும் அருட்கொடைகளில் ஒன்றாகும். காரணம் மேற்குறிப்பிட்டுள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களின் படி கஷ்டமான சந்தர்ப்பங்களில் பொறுமையாக இருப்பது மிகவும் கடினமான காரியமாகும். இதன் போது ஒருவனின் மனோநிலை முழுவதுமாக இறைவனின் நாட்டத்திலும் அவனின் அருளிலும் பூtfdgfரண நம்பிக்கையுள்ளதாக இருக்க வேண்டும். அது தவிர எந்த வித கஷ்டங்களையும் சகித்து வாழும் மனிதன் மறுமையில் தனக்குக் கிடைக்கவிருக்கும் அந்தஸ்த்தைப் பற்றியும் பூரண நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல சகோதரர்களே, இந்தப் பொறுமையானது கஷ்ட நேரத்தில் மட்டுமின்றி வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். ஏனென்றால், எமது அன்றாட வாழ்வில் பல்வேறுபட்ட மனிதர்களையும் பல்வேறு விதமான சம்பவங்களையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் அனைவரும் தள்ளப்படுவோம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனின் பொறுமை எனும் அல்லாஹ்வின் அருளை நாம் பற்றிப்பிடிக்க வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வின் நேசத்துக்குரியவர்களாக மாறலாம்.

ஒருவன் தனக்குக் கோபம் ஏற்படும் போது பொறுமையைக் கடைபிடிப்பான் என்றால் மிகப் பெரும் சர்ச்சைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இது தவிர மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய அந்தஸ்த்தை உடையவனாகக் கருதப்படுவான்.
இது பற்றிக் குறிப்பிடும் போது நபியவர்கள், தனக்குக் கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வீரன் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இன்றைய எமது வீடுகளில், குடும்பங்களில், தொழில்புரியும் இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் கோபமும் அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது செல்வதும் ஆகும்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்று கூறுவது போல இன்றைய எமது சமூகத்தில் உயரிய இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டிய பெற்றோர்கள் நோவினை செய்யப்படுவதும், அன்பு காட்டி வளர்க்கப்பட வேண்டிய குழந்தைகள் மனநோயாளர்களாக மாறி இருப்பதும் சிலரின் கோபத்தால் வந்த விளைவுகளாகும்.gffghjg

கோபத்தைத் தவிர மனிதன் பொறுமையாக இருக்க வேண்டிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. பாவமான காரியங்களின் போது பொறுமையைக் கடைபிடிப்பதும் அவற்றில் ஒன்றாகும். காரணம் நபியவர்களின் ஹதீஸின் படி, ஷைத்தான் என்பவன் மனிதனின் அனைத்து இரத்த நாளங்களிலும் ஓடக்கூடியவனாவான். அது தவிர அவன் மனிதனை அவனது முன் பக்கமாக, பின் பக்கமாக, வலது புறமாக, இடது புறமாக என பல வழிகளிலும் வழிகெடுக்க முற்படுவான். அத்தகைய சந்தர்ப்பங்களில் மனிதனை வழி தவறச் செய்வான். அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளதன் படி தீய காரியங்களை ஷைத்தான் அழகாகக் காட்டி அவற்றைத் தொடர்ந்து செய்ய வழி அமைத்துக் கொடுப்பான். இத்தகைய சந்தர்ப்பங்களில் தன் மனோ இச்சைக்கு ஒருவன் கட்டுப்பட்டு தீமை செய்வதிலிருந்து ஒருவன் பொறுமையாக இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறுவான்.

தனது பிராத்தனைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற வேண்டும் என நினைக்கும் மனிதனுக்கும் அல்லாஹுத்தஆலா பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுமாறு குறிப்பிடுகின்றான். மேலும் அவன் இன்னோர் இடத்தில் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருப்பதாகக் குறிப்பிட்டு பொறுமைக்கு மற்றும் பொறுமையாளர்களுக்கு மிகப் பெறும் அந்தஸ்த்தைக் கொடுக்கிறான்.cvcch

மேலும் சகோதரர்களே, அல்லாஹ் அல்குர்ஆனில்
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! 2:250

என்ற பிராத்தனையைச் சொல்லித்தந்து எமக்குப் பிராத்திக்குமாறு கட்டளையிட்டுள்ளமை பொறுமையுடனிருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஆகவே என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இஸ்லாம் காட்டித்தந்துள்ள பொறுமை எனும் அருளை எம் வாழ்வில் கடைபிடித்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக. ஆமீன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *