அல் குர்ஆனே சிறந்த நிவாரணம்

அல்லாஹ்வால் படைத்துப் பரிபாலிக்கப்படும் இவ்வுலகில் மனிதனின் செயற்பாடுகளே பெரும்பாலான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன. அவனது செயல்கள் சிறந்து விளங்கினால் அவன் சார்பான ஏனைய நிகழ்வுகளும் மிகச் சிறந்து விளங்கும். அந்த வகையில் மனிதனின் ஒவ்வொரு நகர்வும் அவனது வாழ்வில் முக்கியமானதாகும்
இவ்வாறு அவனின் வாழ்வைத்தீர்மானிக்கும் நடத்தைகளின் அடித்தளம் அவனது உள்ளமாகும். உள்ளத்தின் பிரதிபலிப்பாகஉள-நோய்கள்வே ஒவ்வொரு மனிதனினதும் செயல்கள் காணப்படுகின்றன. அதனால் நபியவர்கள் “அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்.” எனக் குறிப்பிட்டார்கள்.
இது தவிர தூய உள்ளத்தினால் செய்யும் நன்மை உடலினால் செய்யும் நன்மையை விட அதிக அந்தஸ்த்தைப் பெறுகிறது. அது போலவே பெருமை என்ற உள்ளம் சார்ந்த பாவத்தினால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத ஷைத்தான் இன்று வரை அல்லாஹ்வால் மன்னிக்கப்படாமல் விரட்டப்பட்டவனாகவே இருக்க வெறும் உடல் உறுப்பினால் செய்த ஆதம் நபியவர்களின் பாவத்திற்கு அவன் மன்னிப்பளித்தமை உள்ளம் சார்ந்த பாவங்களின் வன்மையை எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் சகோதரர்களே, இன்று எம் சமூகத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு மூல காரணம் எமது உள்ளமும் அதில் ஏற்பட்டுள்ள நோய்களும் ஆகும். உள்ளத்தில் உருவாகி, எமது நடத்தையில் பிரதிகூலமான விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணங்களே உள நோய்களாகும்.
ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவனில் ஏற்பட்டுள்ள உடல் நோய்கள் இலகுவாகக் குணப்படுத்த முடியும். ஆனால் அவனது உள்ளத்தில் குடியமர்ந்துள்ள நோய்களைக் குணப்படுத்துவது கடினமாகும். பொறாமை, பெருமை, கோபம், உலோபித்தனம், என்பவை மனித மனங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தவல்ல மிகக் கொடிய குணங்களாகும்.
இந்தக் கொடிய குணங்களில் பாரதூரம் மிகவும் கூடிய கொடிய குணம் “பெருமை” எனும் உள நோயாகும். இதைப் பற்றிக் குறிப்பிடும் போது நபியவர்கள், “யாருடைய உள்ளத்தில் ஒரு அணு அளவேனும் பெருமை காணப்படுகிறதோ அவன் சுவனம் நுழைய மாட்டான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் சகோதரர்களே பெருமை எனும் உள நோய் அது தொற்றியிருக்கும் ஒவ்வொரு மனிதனினதும் பண்பாடையும், பணிவையும், நfghfhfற்குணத்தையும் இழந்து இறுதியி சுவனத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். அது தவிர இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவன் பிறரின் ஆலோசனைகளை ஏற்கும் மனநிலையை இழந்து தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்கும் நிலைக்குத்தள்ளப்படுவான். மேலும் தான் மாத்திரமே சிறந்தவன் எனக் கருதும் இவன் பிறரிடமிருந்து தனக்குத்தெரியாத விடயங்களைக் கற்றுக் கொள்ளவும் மாட்டான்.
இவனின் செயலைப் பற்றிக்குறிப்பிடும் போது நபியவர்கள் “ ஒருவர் தன் முஸ்லிம் சகோதரனைத் தாழ்வாக நினைப்பது அவனது கெடுதிக்குப் போதுமானது” எனக் கூறியுள்ளார்கள்.
மேலும் சகோதரர்களே பெருமை என்ற நோய்க்கப்பால் இன்றைய உலகில் பெரும்பாலானவர்களிடம் காணப்படும் ஒரு நோய் பொறாமை ஆகும். இந்தப் பொறாமையானது ஒருவனுக்குத் தொற்றி விட்டால் அவனறியாமலே அந்நோய் அவனை அழித்து விடும். தன்னை விட அழகில், செல்வத்தில், அந்தஸ்த்தில் உயர்ந்தவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் மனிதனைப் பற்றிக் குறிப்பிடும் போது “நெருப்பு விறகை எரிப்பது போல நிச்சயமாக பொறாமை நன்மைகளை எரித்து விடும்.” எனக் கூறினார்கள்.
அது தவிர இன்று எம்மத்தியில் நிகழும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும், பிரிவினைகளுக்கும் பிரதான காரணம் இந்தப் பொறாமை தான். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தான் பெற்றிருக்கும் அருளுக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மறந்து தான் பெற்றிராத ஆனால்sdsgd பிறர் பெற்றுள்ள சில நன்மைகளுக்காகப் பொறாமை கொள்கிறான். ஆரம்பத்தில் உள்ளத்தால் தீங்கிழைக்கத் தூண்டிய பொறாமை எனும் நோய் இறுதியில் குறித்த நபருக்கு எதிராகச் செயற்படத் தூண்டுகின்றது.
எம்மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றுமொரு உள நோயாக உலோபித்தனத்தைக் கருத முடியும். காரணம் அல்லாஹ் தனக்களித்திருக்கும் அருட்கொடைகளைத் தான் மட்டும் பயன் படுத்தி, உலகில் தான் மட்டும் நன்றாக வாழ நினைக்கும் கொடிய உணர்வே இந்த உலோபித்தனமாகும்.
இந்தக் குணத்தைக் கொண்டவன் தன்னிடம் உதவி கேட்டு வருபவருக்குக் கொடுப்பதையோ, அவர்களுக்கு உதவி செய்வதையோ அடியோடு விரும்ப மாட்டான். அது தவிர இத்தகையவன் பிறர் தர்மம் செய்வதைக் கூட தடுத்து விடுவான்.
தன் செல்வம் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் குறைந்து விடும் என்ற உள நோயே இதற்குக் காரணமாகும். மேலும் இவ்வாறானவன் தனது தேவைகளைக் கூட மன நிறைவாக நிறைவேற்ற மாட்டான். மாறாக தன் செல்வம் அழிந்து விடும் என்ற பயத்தில் அரைகுறைவாக நிறைவேற்றுவான். தன் வீட்டுக்கு விருந்தினர் வருவதை கடுமையாக வெறுக்கும் இத்தைகையவன் வீட்டுக்கு வந்த விருந்தினரை வேண்டா வெறுப்பாக உபசரிப்பான். எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ – (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன். (57:24) என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.hjgjgj
நீண்டு செல்லும் இந்த உள நோய்கள் பட்டியளில் அடுத்து வருவது நாவினால் செய்யும் பாவங்களாகும். அவற்றில் பிறரைப்பற்றிப் புறம் பேசுதல், கோள் சொல்லல் என்பவை அடங்கினாலும் உள நோயின் நேரடி விளைவாக பிறரின் குறைகளைப் பகிரங்கப்படுத்துவதைக் கூறலாம். காரணம், பிறர் சிறந்த முறையில் வாழ்வதையோ மகிழ்வாக இருப்பதையோ விரும்பாமல் அவர்களின் குறைகளைத் துருவுத்துருவி ஆராய்ந்து அதைப் பிறரிடம் பல வர்ணனைகளுடன் எத்திவைப்பர்.
பிறரின் குறைகளை ஆராய்ந்து மாநாடு போடும் இவர்களுக்கு தங்கள் குறைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்யத் தயாராக இருப்பதில்லை. அப்படியே இவர்களின் குறைகளையோ குற்றங்களையோ யாராவது சொன்னால், அதை எப்படியாவது மறுத்துத் தாங்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை என்று நிரூபிப்பார்கள்.
என் இஸ்லாமிய சகோதரர்களே உள்ளம் எனும் மறைவான உறுப்பில் ஏற்படும் நோயின் விளைவுகளில் சிலதை நாம் பார்த்தோம். அந்த வகையில் இவற்றுக்கான மருந்து எங்கு? எந்த வைத்தியரிடம் உள்ளது? சிந்தனை எழுகிறதா?
அல்லாஹ் புனித அல் குர்ஆனில்,vghfh
“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.” (10:57)
எனக் குறிப்பிடுவதன் மூலம் உள நோய்க்கான நிவாரணியாக குர்ஆனைக் காட்டித்தருகின்றான்.
ஆகவே என் இஸ்லாமிய சகோதரர்களே, அல்குர் ஆன் காட்டித்தந்த முறைகளில் எமது உள நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டு இன்று எம் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல வகையான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *