அன்றாட துஆக்கள்

                                      இன்றைய இயந்திர உலகில் நேரத்தை வென்று விட அதன் பின்னால் இயந்திரமாக நாம் சுழலுகின்றோம். உலகின் அற்ப இலக்குகளுக்காக சுவனம் எனும் அழியா இலக்கை மறந்து விட்டுள்ளோம். அந்த வகையில் இன்று எம்மத்தியில் இருந்து எம்மால் மறக்கப்பட்டு எம்மை விட்டுப் பல விடயங்கள் சென்றுள்ளன. அவற்றில் ஒன்றாக நாம் வழமையாக ஓதக் கடமைப்பட்டுள்ள ‘அன்றாட துஆக்களை’ எடுத்துக் கொள்ளலாம்.fgdg காரணம், அல்லாஹ்வாலும் நபியவர்களாலும் துஆக் கேட்பது பற்றியும் அவற்றின் சிறப்பு பற்றியும் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. “ஒரு முஃமினின் ஆயுதம் துஆவாகும்”, “அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்.” போன்றவை நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட சிலபொன்மொழிகளாகும். அது தவிர அல்லாஹ்வும் புனித குர்ஆனில் பல துஆக்களை அவனிடம் கேட்குமாறு பணித்திருப்பதுடன் பல துஆக்களையும் எமக்குக் கற்றுத்தந்துள்ளான். ஆனால், நாமோ எமது வாழ்நாளில் மிகச் சில மணித்தியாலங்களையே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதிலும் அவனது இபாதத்களை நிறைவேற்றுவதிலும் கழிக்கிறோம். ஏனைய உலக விவகாரங்களை நிறைவேற்ற பெரும்பான்மையான எமது நேரத்தைச் செலவழிக்கும் நாம் எப்போதாவது இறை அருளுக்கு நன்றி செலுத்துவது பற்றிச் சிந்தித்திருப்போமா? பெரும்பாலும் நாம் நினைத்திருக்க மாட்டோமல்லவா?ffgfh ஆனால் என்னையும் உங்களையும் படைத்த இறைவன் எமக்கு அவனது அருட்களுக்கு நன்றி செலுத்துவதற்கும், எமது வேலைகளை இலகுவாக நிறைவேற்றுவதற்கும், நாம் செய்யும் அன்றாட செயற்பாடுகளில் எமக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் வழிவகுத்துத் தந்துள்ளான். அந்த வகையில் அவன் எமக்கு அறிமுகப்படுத்தியுள்ள எமது அன்றாட செயற்பாட்டின் போது ஓதப்படக்கூடிய துஆக்கள் முதன்மை பெறுகின்றன. காரணம், வழமையாக உண்ணல், குடித்தல், உடுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் நாம் அவற்றுக்குத் தனியாக நன்றி செலுத்தவும், உலக விவகாரங்களில் ஈடுபடும் போது அந்த செயல்களின் மூலம் ஏற்படவிருக்கும் தீங்குகளுக்குப் பாதுகாவல் தருவதாகவும் இந்த துஆக்கள் காணப்படுகின்றன. xcxvஉதாரணமாக நாம் சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆவான الْحَمْدُ لِلَّه (ஆதாரம்:முஸ்லிம் 4915 ) என்பதற்குப் பொருளாக அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எனக் காணப்படுவதும், உணவளித்தவருக்காக ஓதும் துஆவான اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ (ஆதாரம்:முஸ்லிம் 3805) என்பதற்கான பொருளாக, இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. எனக் காணப்படுகின்றமையும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இந்த துஆக்கள் காணப்படுகின்றமையை அறியலாம். அது தவிர, கழிவறையில் நுழையும் போது ஓதும் اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِث இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: புகாரி 6322) என்ற துஆ, வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: நஸயீ 5391, 5444) போன்ற துஆக்களில் அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்கப்பால் நாம் அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள் பலவற்றில் எமது தீங்கான செயற்பாடுகளுக்கான மன்னிப்புக் கோரலும் காணப்படுகின்றன. மேலும் சகோதரர்களே, மேற்குறிப்பிடப்பட்ட அன்றாட துஆக்களை எமது வாழ்வில் கடைபிடிப்பது என்பது காலச் சக்கரத்தில் தானாகப் பயணித்துக் கொண்டிருக்கும் எமது வாழ்க்கையை, எமது செயற்பாடுகளை நன்மைகள் பலவற்றைக் கொள்ளையடிக்கும் இபாதத்களாக மாற்றும் என்பதில் இன்ஷாஅல்லாஹ் எவ்வித ஐயமுமில்லை.bvc - Copy அது தவிர, உள்ளத்தால் பொருளுணர்ந்து அல்லாஹ்வின் அருட்களை நினைத்து உண்மையாகவே ஒருவர் இந்த அன்றாட துஆக்களை ஓதினால் நிச்சயம் நன்மையுடன் மனநிம்மத்தியையும் உணர்வார். ஆகவே இன்றிலிருந்து எம்மால் மறந்து கைவிடப்பட்ட இந்த அன்றாட துஆக்களை ஓத ஆரம்பிக்கவும், அல்லது ஆரம்பித்தவர்கள் தொடர்ந்து ஓதவும் நாம் அனைவரும் ஒன்றினைவோமாக. ஆமீன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *